வீடு



வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் இந்திய வம்சாவளி மரபினரும் முதலீட்டுக்கு முதலில் தேர்ந்தெடுப்பது இந்திய சொத்துகள்தான்! குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சொத்து விலை பலமடங்காக உயர்வதால், வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் அதிக அளவு இங்கு நிலத்தில் முதலீடு செய்கிறார்கள். வெளிநாட்டு வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு என்பதும் ஒரு காரணம்.ஆனால், இந்திய நாட்டில் சொத்து வாங்குவதற்கான விதி முறைகள் தெரியாததால், இவர்கள் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் சொத்தை விற்கும்போதும், அதை வாங்குபவருக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இவற்றைத் தவிர்ப்பது எப்படி? விளக்குகிறார் ட்ரைஸ்டார் ஹவுசிங் நிர்வாக இயக்குனர் பா.ஜார்ஜ் பீட்டர் ராஜ்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள்.
1.   இந்தியக் குடியுரிமை பெற்றுள்ள ஒருவர் வேலை செய்வதற்காகவோ, தொழில் செய்வதற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ வெளிநாட்டில் தங்க நேரிடும்போது அவர் ழிஸிமி   (வெளிநாட்டுவாழ் இந்தியர்) என அழைக்கப்படுகிறார்.
2.பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான், பூடான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் வாழும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்யும்போது  (இந்திய வம்சாவளியினர்) என அழைக்கப்படுகிறார்கள்.

 இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால்...

 இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 (57/1955)படி அவருடைய தந்தை அல்லது தந்தைவழி தாத்தா இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருந்தால்...இவர்கள் இந்தியாவில் சொத்து வாங்கலாம். வாங்கும்போது பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

வீட்டுமனைகள், வணிக வளாக இடம், வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகியவற்றை வாங்கலாம். விவசாய நிலம், பண்ணைத் தோட்டம் மற்றும் பிளான்டேஷன்சொத்துகளை வாங்கக்கூடாது.  

 
யாரிடமிருந்து இடம் வாங்குகிறாரோ அவருக்கு செலுத்த வேண்டிய தொகையை, வாங்குபவர் எந்த நாட்டில் குடியிருக்கிறாரோ, அங்கு அவர் பெயரிலுள்ள வங்கிக்கணக்கில் இருந்தோ, இந்தியாவிலுள்ள அவரது வங்கிக்கணக்கில் இருந்தோ பாரத ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி செலுத்த வேண்டும்.

  7 என்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதோடு கிரயப்பத்திரத்தின் நகலையும், நில விற்பனை செய்தவருக்கு வங்கி மூலம் பணம் செலுத்தப்பட்டதற்கான சான்றுகளையும் இணைத்து மும்பையிலுள்ள அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும். சொத்து வாங்கிய 90 நாட்களுக்குள் இதை அனுப்பவேண்டியது முக்கியம்.  7  படிவத்தில் பெயர், முகவரி, எதன் அடிப்படையில் நீங்கள் ஆக இருக்கிறீர்கள், வாங்கிய சொத்து பற்றிய விவரம், வாங்கும் காரணம், பணம் செலுத்தியது போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.
இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால் சொத்து வாங்குவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.  விவரம் தெரியாமல் பண்ணை நிலங்கள் மற்றும் உள்ளாட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் முதலியவற்றை வாங்கி விடுவதுதான் வெளிநாட்டுவாழ் இந்தியர் பலர் செய்யும் தவறு.

 உள்ளாட்சியில் வீட்டுமனைக்கு அங்கீகாரம் அளிக்க அதிகாரம் இல்லை என்ற காரணத்தினால், அந்த இடமும் அது எதற்கு பயன்படுத்தப்பட்டதோ அந்த வகை நிலமாகவே கருதப்படும். விவசாய நிலம் உள்ளாட்சியால் அங்கீகரிக்கப்பட்டு வீட்டுமனைகளாக விற்கப்பட்டிருந்தாலும், அது வீட்டுமனையாகக் கருதப்படாது; விவசாய நிலமாகவே கருதப்படும். அதனால் இந்த இடத்தை வெளிநாட்டுவாழ் இந்தியர் வாங்கக்கூடாது.  

மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி ஒருவர் இந்த விவரம் தெரியாமல், 2000மாவது ஆண்டில் அரக்கோணம் அருகில் 5 ஏக்கர் பண்ணை நிலம் வாங்கி, மேலும் அதிக பணம் முதலீடு செய்து மா, கொய்யா, தென்னை போன்ற மரங்களை நட்டுப் பராமரித்து வந்தார். அவசரத் தேவைக்கு விற்க நினைக்கும்போது, அவரால் அந்த இடத்தை விற்க முடியவில்லை. அந்த இடத்தை வாங்குவதற்கே அனுமதி இல்லாத ஒருவரால், அதை எப்படி விற்க முடியும்? இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்.இந்தியாவில் & முக்கியமாக தமிழ்நாட்டில் & முதலீடு செய்து, சிறிது காலத்துக்குப் பிறகு நிலத்தை நல்ல விலைக்கு விற்று, முழுப்பணத்தையும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என நினைக்கிறார்கள் பலர். அது முடியுமா? அடுத்த வாரம்...  (கட்டுவோம்!)