நியூஸ் வே,,,



படத்தயாரிப்பை அடுத்து மியூசிக் கம்பெனி தொடங்குகிறார் கவுதம் மேனன். சிறப்பு விருந்தினராக வந்து அதைத் தொடங்கி வைப்பது ஹாரிஸ் ஜெயராஜ். வெளிப்படையாக மோதிப் பிரிந்தவர்கள் மீண்டும் வெளிப்படையாகச் சேர்வதற்கான ஒத்திகையோ?


பல மாதங்களாகத் தொடர்கிற ‘7ஆம் அறிவு’ படப்பிடிப்பில் விடுமுறையே விடுவதில்லையாம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இதனால் லீவு வேண்டி குட்டிப்பொண்ணு மாதிரி பிரார்த்தனை செய்கிறார் கமல் பொண்ணு ஸ்ருதி!

கோலிவுட்டின் குடுமிப்பிடிச் சண்டை இப்போது இரண்டு கேரள சேச்சிகளுக்கிடையே தான். ஓவியா, அமலா பால் & இருவரில் யார் டாப் என்பதற்காகவே விதம்விதமாக யுத்தம் செய்கிறார்கள்.

‘‘ஆணாதிக்கம் அளவில்லாமல் பரவியிருக்கும் விளையாட்டுதான் கிரிக்கெட்’’ என்று 7 ஆண்டு கால அனுபவத்திலிருந்து கூறியிருக்கிறார், கிரிக்கெட்டிலிருந்தே பணமும் புகழும் சம்பாதித்த மந்திரா பேடி!

மும்பையில் நடந்து முடிந்த ‘குளோபல் இந்தியன் மியூசிக் விருது’ வழங்கும் விழாவில் இரண்டு விருதுகள் வென்றிருக்கிறார் ‘மகாநதி’ ஷோபனா. விருது வாங்கிய சந்தோஷத்துடன், சீசன் கச்சேரிக்காக சென்னை வந்திருக்கிறார்.

விடுமுறைக்காக தன்னந்தனியே இஸ்தான்புல் சென்ற திவ்யா ஸ்பந்தனா, அங்கேயே தன் பிறந்த நாளையும் கொண்டாடியிருக்கிறார். அதுவும் தனியேதான்!

நடிகராகும் ஆசையில் மும்பை ஆக்டிங் ஸ்கூலில் படித்தவர் மன்சூர் அலிகான். பிறகு குரூப் டான்சராக வலம் வந்தவருக்கு ‘வில்லத்தனம் நன்றாக வரும்’ என்பது ஆரம்பத்தில் தெரியவே இல்லையாம்!

‘‘அடுத்து வருகிற படங்களில் என்னைப் பார்த்தால் எனக்கே வெறுப்பு வரும்படி மிகக்கொடூரமாக நடித்திருக்கிறேன்’’ என்கிற ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நேரில் பேசும்போது அவ்வளவு மென்மை!