ஜோக்ஸ்





‘‘தலைவர் தட்டுத் தடுமாறி மேடையில ஏறுற மாதிரி ஆகிப்போச்சு...’’
‘‘அவ்வளவு கூட்டமா..?’’
‘‘ம்ஹும்... அவ்வளவு போதை!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘கட்சி ஆபீஸ்ல சூதாடினவங்களை போலீஸ் புடிச்சிக்கிட்டு போயிருச்சு தலைவரே...’’
‘‘என்ன பந்தயம்
வச்சு ஆடுனாங்க..?’’
‘‘உங்களை சி.பி.ஐ அரெஸ்ட் பண்ணுவாங்களா...
மாட்டாங்களான்னுதான்..!’’
- சி.சாமிநாதன், கோவை.

‘‘எதுக்கு தலைவரே சம்பந்தமே இல்லாம திடீர்னு இன்னிக்கு கட்சி தாவறீங்க?’’
‘‘இன்றைய ராசி பலன்ல எனக்கு ‘இடமாற்றம்’னு போட்டிருந்துச்சு... அதான்யா!’’
- சரவணன், கொளக்குடி.

என்னதான் மில்லுல போய் கோதுமை அரைச்சாலும், மிளகா, மல்லி, சீயக்காய்னு அரைச்சாலும், மில்லுக்கு பேர் என்னவோ ‘ரைஸ்மில்’தான்!
- பவர்கட் நேரத்தில் அடுத்தவர் தலையில் மிளகாய் அரைப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘தலைவருக்கு வலுக்கட்டாயமா ஜாமீன் குடுத்து அனுப்பிட்டாங்களா... ஏன்?’’
‘‘ஜெயில்ல சக கைதிகளோட சாப்பாட்டை
அபகரிச்சிருக்கார்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘போன வாரம் நடந்த மாமியார் - மருமகள்
சண்டையில எங்க வீடு ரெண்டாயிடுச்சு...’’
‘‘ஐயோ... அப்புறம் என்ன பண்ணீங்க?’’
‘‘ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுட்டோம்..!’’
- பி.கோவிந்தராஜ், மதுரை.

சாப்பாடு கெட்டுப் போனா, குப்பைத்தொட்டில போடலாம்; தின்பண்டம் கெட்டுப் போனா கூட கீழே போடலாம். ஆனா, சட்டம் - ஒழுங்கு கெட்டுப் போனா அதைக் குப்பையில் போடமுடியுமா?
- மரச்சட்டத்தில் ஆணியடித்தவாறு யோசிப்போர் சங்கம்
- மதிராஜன், பசுமலை.