ஜோக்ஸ்



‘‘நாற்பதிலும் ஜெயிப்பது நாம்தான்...’’
‘‘என்ன தலைவரே சொல்றீங்க? ஆறு கேஸ்ல நீங்க குற்றவாளின்னு தீர்ப்பு வந்துடுச்சே... மீதி இருக்கறது முப்பத்தி நாலுதான்!’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘அந்தக் கட்சியில் அவசரப்பட்டு சேர்ந்தீங்களே... சீட் கிடைச்சுதா?’’
‘‘பிரசார வேன்ல உட்காந்துக்கிட்டுப் போறதுக்கு மட்டும் இடம் தருவாங்களாம்..!’’
- எம்.ஹெச்.இக்பால்,
கீழக்கரை.

‘‘தலைவர் பெரிய கப்ஸா மன்னனா இருப்பார் போலிருக்கு...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘கட்டபொம்மன் காலத்திலிருந்தே நாங்க தூக்கு தண்டனையை எதிர்த்து வருகிறோம்ங்கிறாரே!’’
- பாலா சரவணன், சென்னை-122.

‘‘திருடும்போது நீ மாட்டிக்கிட்டதுக்கு உன் முன்ஜாக்கிரதையே காரணமா, எப்படி?’’
‘‘2005க்கு முன்னே அச்சடிச்ச நோட்டுக்கள் செல்லாதுன்னு தனியா பிரித்து வைக்க தாமதமாயிடுச்சி... அதனாலே மாட்டிக்கிட்டேன் எசமான்!’’
- வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.

ஸ்பீக்கரு...

‘‘எங்கள் தலைவர் மீது செருப்பை எறிந்து அழகு பார்க்கும் எதிர்க்கட்சிக்
காரர்களே, உங்களுக்கு தைரியமிருந்தால் என் தலைவர் மீது பெப்பர் ஸ்பிரே அடியுங்கள் பார்க்கலாம்!’’
- எஸ்.சங்கர்,
திருப்பரங்குன்றம்.

நடந்து போறவங்களை ‘பாதசாரி’ங்கறோம். அதுக்காக வலது பக்கம் நடந்து போறவங்களை ‘வலது சாரி’ன்னும், இடது பக்கம் நடந்து போறவங்களை ‘இடது சாரி’ன்னும் சொல்ல முடியுமா?
- லாரி லாரியாய் தத்துவங்களை வாரி இறைப்போர் சங்கம்
- பாளை பசும்பொன், மதுரை-16.

‘‘எதுக்குய்யா அந்தக் கட்சித் தலைவரை கூட்டணிக்கு அழைச்சிக்கிட்டு வர்றே... அவருக்கும் நமக்கும் எந்த விஷயத்திலாவது ஒத்த கருத்து இருக்கா?’’
‘‘இருக்கு தலைவரே! நாம குடிக்கிற அதே பிராண்ட் சரக்கைத்தான் அவரும் குடிக்கிறார்...’’
- ம.விருதுராஜா,
திருக்கோவிலூர்.