facebook வலைப்பேச்சு



வீட்டு விசேஷங்களின்போது, கையில் கிடைக்கும் வாகனத்தை எடுத்துக் கொண்டு, கடைக்குப் போய்விட்டு திரும்பும் சமயத்தில், ‘எந்த வாகனத்தில் வந்தோம்? எங்கே நிறுத்தினோம்?’ என்று குழம்பி இருந்தால், நீயும் என் தோழனே!
- விக்டர் ராஜ்

கையறு நிலையில் கடவுளை நாடுவதில்லை, கதறி அழுது விடுகிறேன்.
கண்ணீரைக் காட்டிலும் மேலான கடவுள் யாருமில்லை.
- ராஜசேகர் மனோகரன்

பழைய சாதத் தில் தொடங்கி... பழைய கீ பேட் தேய்ந்த செல்போன் வரை அம்மாக்களே மிச்சமானதை வைத்துக்கொள்கிறார்கள்.
- சித்தன் கோவை
ஒரு பேரழுகைக்கு பின்னான நிம்மதியை எவ்வளவு பெரிய வெற்றியும் தராது.
முத்துராம்

கைக்கெட்டும் தூரத்தில் தண்ணீர் இருக்கையில், பெரும்பாலும் விக்கல் வருவதேயில்லை!
- மாதேஷ் ஆன் க்லவுட் நைன்
எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், கடைசியில் கைநாட்டு தான் பாதுகாப்பானது.
- சுந்தரி விஸ்வநாதன்

போக்குவரத்து விதிமீறலில் சைக்கிள் ஓட்டிக்கு அதிகபட்ச அபராதம் என்பது, வீல் காற்றை இறக்கி விடுவது!
- ப்ரபின் ராஜ்

ஏசி ரூமில் குஷன் சேரிலிருந்து எழுந்தாலும், பின்புறத்தை தட்டிக்கொள்வதுதான் ஜெனடிக் நேச்சர் என்பது.
- அராத்து

‘பாம்’ கலாசாரத்தை விட படுபயங்கர மோசமானது, ‘பேனர்’ கலாசாரம்...
- கரு வைரா

ட்ரெய்ன்ல ஏறி உக்காந்த உடனேயே வீட்ல இருந்து கொண்டு வந்த கட்டுச்சோத்த அவுக்கிற பயல்க பூராம் நம்ம பயல்கதேன்!
- ஜெயராஜ் பாண்டியன்

சோற்றுப்பருக்கைகளாய்
உன் நினைவுகள்
அள்ளி உண்ணும்போதெல்லாம்
மென்னியில் சிக்குகிறாய்
கவிதை நீர் கொண்டு
நித்தம் உண்கிறேன்...
- சுந்தரி விஸ்வநாதன்

இருப்பதை இல்லாதது போன்றும்
இல்லாததை இருப்பது போன்றும்
காண்பிக்க முனைதலே
அழகுக் கலை
- அனிதா ஜெயராம்

 குடும்பப் போரில் அமைதியான பேரழிவு மிக்க ஆயுதம்... ‘உப்புமா’!
- வெங்கடேஷ் ஆறுமுகம்

விளக்கைத் தேய்த்தேன்
பூதம் வந்து பணிந்தது
இருட்டாயிருக்கிறதென்றேன்
விளக்கைப்
பொருத்தி விட்டுப்
போயிற்று
பேசாமல் தீப்பெட்டியையே
தேய்த்திருக்கலாம்
 கலாப்ரியா

அம்பாசிடர் கார்லேந்து ஆடி கார் வரை எதை ஓட்டினாலும், ஒரே சம்பளம் தான் தருவாங்க...
- நிர்மலா ஸ்ரீதரன்

அவ அழகான பொண்ணா இருக்காளாங்கிறது முக்கியமில்ல பாஸ்; நம்மள அழாம வச்சி காப்பாத்துவாளாங்கிறதுதான் முக்கியம் பாஸ்!

 அர்ஜுன் ரகு

twitter வலைப்பேச்சு

@kiramaththan   
அவள் அவனுள் தன் தந்தையையும், அவன் அவளுள் தன் தாயையும் தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கிறார்கள், நம்பிக்கையுடன்!

@losangelesram 
சர்வதேச ஆயுதக் கொள்முதலில் இந்தியா முதலிடம். ஆனால் சப்மரீனுக்கு பேட்டரி வாங்க காசில்லையாம். 2 பேர் உயிரிழப்பு. என்னங்கடா அநியாயம் ;(

@orupakkam 
காலம் மருந்தாக மட்டுமில்லை... மறதியாகவும் மாறிவிடுகிறது. பழைய கடித உரையாடலில் மூழ்கிக் கிடக்கும் நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன.

@WritterMazhalai   
ஆழ்துளைத்த மனதினில் ஊற்றாக ஊறும் உன் காதல், என் தாகம் தீர்க்கும்!
# கவுஜ

@SettuSays   
ஒரு பொண்ணு தன்னப் பத்தி எல்லாத்தையும் சொல்ல ஆரம்பிச்சா நம்மள வெறித்தனமா நம்புறாள்னு அர்த்தம்..

@arattaigirl 
பொது புத்தி என்பது ‘புத்தி’யில் சேர்த்தியல்ல...

@raakkiganesh
சூடா குடிக்குற டீக்கு கைப்பிடி இல்லாத க்ளாஸ். கூலா குடிக்கிற ஜூஸுக்கு கைப்பிடியோட க்ளாஸ்... இதான் வாழ்க்கை!

@gdmohanraj 
நாட்டுல பாலாறும், தேனாறும் கூட ஓட வேண்டாம். இருக்குற ஆத்துல மண்ணு லாரி ஓடாம இருந்தாப் போதும்.

@manipmp 
உதிர்ந்து வந்த சிறகொன்றை கேட்டேன், சாவுதான் விடுதலையா? ‘இல்லை... போராட்டம்’ என்றது சிறகு!

@jebz4 
ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும், இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...

@g_for_Guru 
‘என்னை நல்லா பாத்துக்குற’க்கு பின் ஒளிந்திருப்பது... நல்லா சமைக்கிற, துணி துவைக்கிற, வீடு கூட்டுற...
# கல்யாண மாலை

@Gnanakuthu   
அம்மாவைப் போல் மணக்கும்படி சிலரால் சமைத்துவிட முடியும். ஆனால் அம்மாவை மறக்க வைக்கும்படி யாராலும் சமைத்துவிட முடியாது!

@thoatta
இன்றைய இந்தியக் கல்விமுறை ரொம்ப சிம்பிள்... மாணவர்கள் பள்ளியில் கற்க ஆசைப்படுகிறார்கள்; பள்ளிகள் மாணவர்களிடம் கறக்க ஆசைப்படுகிறார்கள்!

@ bommaiya   
பொதுவா கணவன்  மனைவி சண்டையில் கணவன் கைதான் முதலில் நீளும்... தன்னைத் தாக்க வரும் ஆயுதத்தை ‘கேட்ச்’ பிடிக்க...

@sweathasun   
கண்ணீராலும் கோபத்தாலும் வெளியேற்ற முடியாத சில நினைவுகளை என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. உன்னிடம் தந்துவிட உனக்காக வைத்திருக்கிறேன்!

@RealBeenu 
பொய்கள் சொல்லும்போது கிடைக்கும் ஆனந்தம், உண்மை சொல்லும்போது கிடைப்பதில்லை!

@Rocket_Rajesh 
அலுவலகத்தில் இருக்கும் சில சைக்கோக்கள பார்க்கும்போது, அவனுக கூட குடும்பம் நடத்துற பொம்பளைகள நெனச்சு பரிதாபப்படுறேன்.

@senthilcp 
வேலைக்கு லேட்டாக வந்த 10 ஏர் ஹோஸ்டஸ்களை டிஸ்மிஸ் செய்த ஏர் இந்தியா
# மேக்கப் போட 5 மணி நேரம்
லேட்டாச்சாம்.
இதுக்குப் போயி...

@Alexxious 
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்; மறு நாள் ஜாமீனில் வெளிப்படுவான்!!