சகுனியின் தாயம்



மீன் நீந்த வேண்டிய இடம் அந்த பீப்பாய்தான் என்று புரிந்த பிறகு இளமாறன் காத்திருக்கத் தொடங்கினான். விசாரணைக்காக அழைத்து செல்லப்படும்போது அல்லது விசாரணை முடிந்து வெளியேறும்போது எப்படியாவது அந்த பீப்பாய்க்குள் புகுந்துவிட வேண்டும். விசாரணை நடக்கும்போது இப்படி புக சாத்தியமில்லை.

எனவே இருப்பது இந்த இரண்டு வழிகள்தான். அதில் ஒன்றைத் தேர்வு செய்யும் பொறுப்பு அவனுடையது. எதைத் தேர்ந்தெடுத்தாலும் அதன் பிறகு நடப்பதை இளவரசர் கவனித்துக் கொள்வார்.

கணத்துக்கும் குறைவான நேரத்தில் தன் பார்வையில் தட்டுப்பட்ட பிம்பத்தை மீண்டும் மனக்கண் முன்னால் கொண்டு வந்தான். ஐந்தடி உயரமுள்ள அகலமான பீப்பாய் அது. எனவே கால்களைக் குறுக்கியபடி அதனுள் தாராளமாக அமரலாம். அமர வேண்டும். அமர முடியுமா? அசைபோட்டபடி நடந்தான். நடந்தபடியே சிந்தித்தான். தெளிவு பிறந்ததும் தன் முன்னால் வைக்கப்பட்ட ஆகாரத்தை, நிறுத்தி நிதானமாகப் புசிக்க ஆரம்பித்தான். உடைகளைச் சரி செய்தவன், அழைப்புக்காகக் காத்திருந்தான்.

ஆனால் நாழிகைகள் கடந்ததே தவிர, அழைப்பு மட்டும் வரவேயில்லை. வேளை தவறாமல் உணவு மட்டும் வந்தது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வீரன் ஆகாரத்தைக் கொண்டு வந்தான். வந்தவனும் சோழ வீரனாகவே இருந்தான். குறிப்பால் கூட எதையும் அவனுக்கு உணர்த்தவில்லை. போலவே, காலையில் வந்த வயதான வீரனும் அதன் பிறகு பார்வையில் தட்டுப்படவேயில்லை.
மெல்ல மெல்ல இளமாறனுக்கு என்ன நடக்கிறது என்று புரிய ஆரம்பித்தது. ‘எப்படியும் தான் தப்பிப்போம்...

 அதற்கான வழியை யோசித்திருப்போம்’ என்பதை சோழ மன்னர் யூகித்திருக்க வேண்டும். சொல்வதற்கில்லை. வெளியிலிருந்து தனக்கு உதவிகள் வரும் என்றும் அவர் கணக்கிட்டிருக்கலாம். அதனால்தான் தன் உறுதியைக் குலைக்கும் நடவடிக்கையில் இறங்க ஆரம்பித்திருக்கிறார். விசாரணையை தள்ளிப் போடப் போட... தனிமையில் தான் வாட வேண்டியிருக்கும். அந்த தனிமை தனக்குள் பூத்த நம்பிக்கையை குலைக்கத் தொடங்கும். அவநம்பிக்கையை உருவாக்கும். வெளியிலிருந்து உதவ நினைப்பவர்களும் எதுவும் நடக்காததால் சோர்வடைவார்கள். எச்சரிக்கை மறைந்து அலட்சியம் எட்டுத் திசையிலும் பரவ ஆரம்பிக்கும். மறைவிடத்தை விட்டு வெளியே வருவார்கள். பொறியில் சிக்குவார்கள்.

இப்படி வெளியிலிருந்து வரவிருக்கும் உதவிகளை அடைத்தபின், தன்னைக் கையாள்வதும், தன் திட்டத்தைக் குலைப்பதும் எளிது என்று கணக்கிட்டிருக்கிறார். இதற்கு இடம் தரக் கூடாது!
ஒரு முடிவுடன் சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை அந்த அறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்தான். மனதை ஒருமுகப்படுத்தி, துளிர்த்த அவநம்பிக்கையை வென்றான்.

ஆனால், இரண்டு விஷயங்கள் மட்டும் பாதத்தை குத்திய முள்ளாக அவனை உறுத்திக் கொண்டே இருந்தன. ஒன்று, பாண்டிய இளவரசர். இந்நேரம் புகார் முழுக்க சோழ வீரர்கள் சல்லடையிட்டு சலிக்க ஆரம்பித்திருப்பார்கள். அவர்கள் கையில் அவர் சிக்கிவிடக் கூடாது. பாண்டிய நாட்டின் எதிர்காலமே அவரது சுதந்திர நடமாட்டத்தில்தான் அடங்கியிருக்கிறது.

இரண்டாவது, யவன ராணி. கொற்கை முத்துக்களைக் கைப்பற்றவும், யவன சாத்துகளை உலகம் முழுக்க நிறுவவும் தேசம் விட்டு தேசம் வந்திருப்பவள். சும்மா இருக்க மாட்டாள். பாண்டிய நாட்டை அழிப்பதற்கான வேலைகளில் இறங்கியிருப்பாள். அவளது திட்டம் என்னவாக இருக்கும்?
எவ்வளவு யோசித்தும் இளமாறனுக்கு விடைகள் ஏதும் கிடைக்கவில்லை.

ஆனால், அவன் அச்சப்பட்டதுபோல்தான் காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. புகாரின் யானைக் கொட்டத்துக்கு நள்ளிரவில் வந்து சேர்ந்த யவன ராணி, போர்க் கவசம் அணிந்திருந்த ஒரு யானையின் தும்பிக்கையைத் தடவியபடி அதன் செவிகளில் எதையோ ஓதத் தொடங்கினாள். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அந்த வாரணமும் தன் தலையை பலமாக அசைக்க ஆரம்பித்தது.
‘‘நிஜமா இங்கிருந்து தப்பிக்க முடியும்னு சொல்றியா..?’’ கண்கலங்க கேட்ட மகேஷை முத்தமிட்டான் ஹாரி பாட்டர்.

‘‘ஆமா. கண்டிப்பா நாம தப்பிக்கத்தான் போறோம். நான் சொல்றதை பொறுமையா கேளு. அதுக்கு முன்னாடி அழுகையை நிறுத்து. நீ குட் பாய்தானே..?’’
‘‘இல்ல அசடு...’’ ‘‘ச்சூ. அப்படி சொல்லக் கூடாது. இங்க முட்டாள்னு யாருமே கிடையாது. என்னையே எடுத்துக்க. உன் னை மாதிரி என் னை எங்கம்மா பாசமா வளர்க்கலை. சித்தியோட பராமரிப்புலதான் வளர்ந்தேன். அவங்க என்கிட்ட அன்பா நடந்துக்கிட்டதே கிடையாது. எடுத்ததுக்கெல்லாம் அடிப்பாங்க. புத்தியில்லைன்னு திட்டுவாங்க. ஆனா, நான் புத்திசாலின்னு நிரூபிச்சேன் இல்லையா?’’

‘‘என்னை சமாதானப்படுத்தணும்னு இஷ்டத்துக்கு பொய் சொல்லாத. எனக்கு எல்லாம் தெரியும். உங்கப்பா ஜேம்ஸ் பாட்டரும், அம்மா லில்லியும் நல்ல மந்திரவாதிங்க. அவங்களோட ஜீன் உனக்குள்ளயும் ஓடுது. ஸோ, இயற்கையாவே நீயும் மந்திரவாதிதான். இதுபோக நீ வேற மந்திர தந்திர கலைகளை ஹாக்வாட்ஸ் ஸ்கூல்ல படிச்சிருக்க. க்விடிச் மந்திர துடைப்பத்தை வச்சு விளையாடியிருக்க. ஆனா, நான் அப்படியா? வெறும் கிரிக்கெட்தான் விளையாடினேன். அங்ககூட பந்து பொறுக்கத்தான் அனுமதிப்பாங்க. இப்படி எதுவுமே தெரியாம இருந்ததாலதான் மந்திரவாதி தாத்தாகிட்ட ஈசியா ஏமாந்தேன். இப்ப பாரு என்னையே ஃபீனிக்ஸ் பறவையா மாத்தி வௌவால் கோட்டைல அடைச்சுட்டாரு...’’

‘‘இதுவும் நல்லதுக்குத்தான் மகேஷ்...’’
‘‘விளையாடாத ஹாரி...’’
‘‘அச்சோ, உண்மையைத்தான் சொல்றேன். எப்படி நான் ஹாக்வாட்ஸ் ஸ்கூல்ல மந்திரக் கலைகளை கத்துக்கிட்டேனோ அப்படி நீயும் இந்த வௌவால் கோட்டைல மாயாஜால வித்தைகளை கத்துக்கப் போற...’’

‘‘ஹை...’’ தன் இறக்கைகளை படபடவென்று அடித்து மகிழ்ச்சியை தெரியப்படுத்திய மகேஷ், ‘‘நீ எனக்கு சொல்லி கொடுக்கப் போறியா?’’ என்று கேட்டான்.
‘‘இல்லை...’’
‘‘இல்லையா?’’

‘‘ம்... உங்க நாட்டு மந்திர கலைகள் எதுவும் எனக்கு தெரியாதே...’’
‘‘அப்படீன்னா எனக்கு யாரு கத்துக் கொடுப்பாங்க?’’
‘‘நேம் ஆஃப் த ரோஸ்...’’
‘‘என்னது... ரோஜா வின் பேரா?’’

‘‘ஆமாம் மகேஷ். அது ஒரு புக். அதை எழுதினது யாரு தெரியுமா? விக்கிரமாதித்தன்...’’
‘‘எந்த விக்கிரமாதித்தன்? வேதாளத்தை சுமந்துக்கிட்டே திரிவாரே... அவரா?’’

‘‘அவரேதான். அவர் உங்க மொழிலதான் ‘ரோஜாவின் பெயர்’னு ஒரு புத்தகத்தை எழுதினாரு. தமிழ்நாட்டு மந்திர தந்திர விஷயங்களை கத்துக்கறதுக்கான கோனார் நோட்ஸ் அது. ஆனா, அந்த புக் இப்ப உலகத்துல எங்கயுமே இல்ல. கரையான்கள் அதை தின்னுடுச்சு. நல்லவேளையா அந்த நூலை படிச்சு ஒருத்தர் ஆங்கிலத்துல ‘நேம் ஆஃப் த ரோஸ்’னு மொழிபெயர்த்திருக்கார். அந்த டிரான்ஸ்லேஷனை நான் ஹாக்வாட்ஸ் ஸ்கூல் லைப்ரரில பார்த்திருக்கேன். வௌவால்களோட இறக்கைல எழுதப்பட்ட புத்தகம் அது. வோல்டமோர்ட்டுக்கும் எனக்கும் சண்டை நடந்தது உனக்கு தெரியும்தானே?’’

‘‘நல்லாவே தெரியும் ஹாரி. அந்த சண்டைலதான் நீ வோல்டமோர்ட்டை கொன்னுட்டியே..?’’
‘‘ஆமா. ஆனா, எங்களுக்குள்ள சண்டை நடக்கறதுக்கு முன்னாடி அவன் அந்த ‘நேம் ஆஃப் த ரோஸ்’ புத்தகத்தை திருடி தன்னோட அக்காகிட்ட கொடுத்துட்டான். அந்த அக்காதான் இந்த வௌவால் கோட்டையை காவல் காக்கிற சூனியக்கார கிழவி...’’

‘‘ஓ... அதனாலதான் தன்னோட தம்பியை கொன்ன உன்னை இங்க தூக்கிட்டு வந்து சிறை வைச்சிருக்காங்களா?
‘‘ஆமா...’’  ‘‘இந்த விஷயங்கள் எல்லாம் மந்திரவாதி தாத்தாவுக்கு தெரியுமா?’’
‘‘தெரியாது. அவருக்கு தெரியறதுக்குள்ள இந்த கோட்டைக்குள்ள அந்த புக் எங்க இருக்குனு கண்டுபிடி...’’
‘‘என்னால முடியுமா?’’

‘‘உன்னால மட்டும்தான் முடியும்...’’
உதட்டை பிதுக்கியபடி யோசனையுடன் ஹாரியை ஏறிட்டான்.
‘‘இதுல யோசிக்க என்ன இருக்கு மகேஷ். எப்படியாவது அந்த புக்கை எடுத்துடு. எக்சாமுக்கு படிக்கிற மாதிரி அதைப் படி. அப்பத்தான் உங்க நாட்டு மாயாஜால வித்தைகளை உன்னால கத்துக்க முடியும்... அதுக்கு பிறகு சுலபமா நீ ராஜகுமாரியையும் காப்பாத்தலாம்... அலாவுதீனுக்கும் சாப விமோசனம் தரலாம்... என்னையும் எங்க நாட்டுக்கு அனுப்பலாம்...’’
‘‘எல்லாம் சரி ஹாரி... ஆனா, அந்த புக் எங்க இருக்குனு ஒரு க்ளுவாவது தெரிய வேண்டாமா?’’

பதில் சொல்வதற்காக ஹாரி வாயை திறந்தபோது சிறைக்கு வெளியே பரபரப்பு ஏற்பட்டது. காவலுக்கு நின்றிருந்த வௌவால்கள் அங்கும் இங்குமாக பறந்தபடி பேச ஆரம்பித்தன.
‘‘உண்மைலயே செத்துட்டானா?’’

‘‘ஆமா, நுரை கக்கி இறந்திருக்கான்...’’
‘‘இதோட அஞ்சு வௌவால்கள் இப்படி மர்மமான முறைல இறந்திருக்கு...’’
இதைக் கேட்ட ஹாரி சட்டென்று மகேஷின் காதில் முணுமுணுத்தான்.

‘‘இதுதான் நீ கேட்ட க்ளூ... வௌவால்களோட சாவுக்கும் ‘நேம் ஆஃப் த ரோஸ்’ புக்குக்கும் தொடர்பிருக்கு...’’
‘‘மிஸ்டர் ரங்கராஜன்...’’ - டாக்டர் தேன்மொழியின் குரல் அமைதியைக் கிழித்தது.
‘‘இவ்வளவு மரியாதை எனக்குத் தேவையில்ல. ரங்கராஜன் அல்லது ரங்கான்னே கூப்பிடலாம்...’’ சிரித்தான்.

‘‘நீங்க யாரு? எதுக்காக ரத்தப் பரிசோதனை முடிவை தேடி வந்திருக்கீங்க?’’ பெயரை குறிப்பிடாமல் பொதுவாகவே பேச்சைத் தொடர்ந்தாள்.
‘‘அது பெரிய கதை. அப்புறம் சொல்றேன். யாரும் வர்றதுக்கு முன்னாடி கடைலேர்ந்து ரிசல்ட்டை எடுத்துடலாம்...’’
‘‘யாராவது வருவாங்கன்னு நினைக்கறீங்களா?’’
‘‘ஸ்காட் வில்லியம்ஸ் வருவான்னு நினைக்கறேன்...’’

‘‘எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?’’
‘‘தமிழகத்தை குறிவைச்சு அவன் வந்ததை வைச்சு...’’

அதன் பிறகு ரங்கராஜனும் எதுவும் பேசவில்லை. தேன்மொழியும் மேற்கொண்டு எதுவும் துருவவில்லை. இருவரும் இரு சக்கர வாகனத்தில் பறந்து கொண்டிருந்தார்கள்.
அது ரங்கராஜனின் வாகனம். ஜேக்கப்பின் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவளை வலப்பக்கமாக அழைத்துச் சென்றான். பதினைந்தடி நடந்ததும் சின்ன சந்து ஒன்று தென்பட்டது. ஜாடையால் அவளை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு அவன் மட்டும் அந்த சந்துக்குள் நுழைந்தான். ஏழாவது வீட்டின் வாசலில் கருநீல நிற பைக் நின்று கொண்டிருந்தது. சாவியால் அதைத் திறந்தவன், வண்டியை ஸ்டார்ட் செய்யாமல் தள்ளிக் கொண்டு அவள் நின்ற இடத்துக்கு வந்தான்.

அந்த இடத்தில் எந்த வீடும் இல்லை. கடைகள் மட்டுமே ஷட்டரால் மூடப்பட்டிருந்தன. வண்டியில் ஏறி அதை கிளப்பியவன், கண்களால் அவளை ஏறச் சொன்னான். ஒரு பக்கமாக அவள் அமர்ந்ததும் கியரை போட்டு இருட்டுக்குள் ஊடுருவினான். சைதாப்பேட்டையை தொட்டு, ராஜ்பவனை கடந்தவர்கள் அடையாறு சிக்னலை நான்கு நிமிடங்களுக்குள் அடைந்தார்கள்.
‘‘தியாசஃபிகல் சொசைட்டி பக்கமா போகணும்...’’

‘‘இடம் தெரியும் டாக்டர். அமைதியா வாங்க...’’ ஆவின் பூத் பக்கம் யூ டர்ன் அடித்தவன் வேகத்தைக் குறைத்து நிதானமாகச் செல்ல ஆரம்பித்தான். பள்ளங்களில் அநாவசியமாக வண்டியை இறக்காமலும், தேவையில்லாமல் பிரேக் பிடித்து தன்னை அவன் முதுகில் மோதவிடாமலும் எச்சரிக்கையுடன் அவன் வண்டியை ஓட்டியது அவளுக்குப் பிடித்திருந்தது.

வேகத்தைக் குறைத்தவன் ‘ரெட் ரத்த பரிசோதனை நிலை’யத்தின் முன் வண்டியை அணைக்காமல் நிறுத்தினான். தேன்மொழி இறங்கவும், அக்கம்பக்கத்தில் இருந்த மரங்களின் பின்னால் இருந்து இருவர் வரவும் சரியாக இருந்தது. வந்தவர்களுக்கும் ரங்கராஜனின் வயதுதான் இருக்கும். ஒருவன் குண்டாக, குள்ளமாக இருந்தான். மற்றவன் கொஞ்சம் உயரமாக ஒல்லியாக இருந்தான்.
எச்சரிக்கையுடன் தன் ஹேண்ட் பேக்கை திறக்க தேன்மொழி முற்பட்டாள். கையால் அதை தடுத்த ரங்கராஜன், வண்டியை விட்டு இறங்கி ஒல்லியாக இருந்தவனிடம் அதை ஒப்படைத்தான். ஆக்ஸிலேட்டரை லேசாக திருகியபடி ஒல்லி மனிதன் அமர, குண்டு மனிதன் இரு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டு பின்னால் அமர்ந்தான்.

கண்களால் அந்த இருவரும் ஏதோ ரங்கராஜனிடம் பேசினார்கள். பிறகு தேன்மொழியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பறந்தார்கள். கேள்வியால் நோக்கிய தேன்மொழிக்கு சிரிப்பை பதிலாக அளித்துவிட்டு ‘ரெட் பரிசோதனை நிலை’யத்தின் பூட்டை திறந்த ரங்கராஜன், ஷட்டரை உயர்த்தினான். கரகர ஓசை அமைதியை குலைத்தது. புலன்கள் விழித்துக் கொள்ள இருவரும் சுற்றிலும் பார்த்தார்கள். எந்த அசைவும் தென்படவில்லை.

ஷட்டரை பாதியிலேயே நிறுத்திவிட்டு இருவரும் குனிந்து உட்புறம் சென்றார்கள். தென்பட்ட கண்ணாடிக் கதவைத் திறந்து தேன்மொழியை உள்ளே போகச் சொன்னவன், பழையபடி ஷட்டரை இறக்கிவிட்டு தானும் உள்ளே வந்தான். பேன்ட் பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டியை கிழித்தவன், அந்த வெளிச்சத்தில் ஸ்விட்ச் பாக்சை தேடினான். ‘‘வேண்டாம்...’’ என்று அவனைத் தடுத்தவள் தன் ஹேண்ட் பேக்கிலிருந்து பென் டார்சை எடுத்தாள். ‘‘இந்த வெளிச்சம் நமக்கு போதும்...’’ என்றபடி முன்னால் நடந்தாள்.

தலையை அசைத்து அதை ஆமோதித்தவன் அவளைத் தொடர்ந்தான். பதினைந்துக்கு பதினைந்தடி அறை அது. அதனை ஒட்டி பக்கவாட்டில் இன்னொரு கண்ணாடி அறை இருந்தது. துப்பட்டாவால் தன் கைகளை மூடிய தேன்மொழி, அந்தக் கண்ணாடி அறையை தள்ளினாள். உள்ளே ரத்த பரிசோதனைக்கான உபகரணங்கள் இருந்தன. டார்ச் அடித்து அறையை அலசினாள். அவர்கள் நின்ற இடத்துக்கு நேர் எதிரே மரத்தாலான ஷெல்ஃப் சுவருடன் பொருத்தப்பட்டிருந்தது. துப்பட்டாவால் மூடிய கைகளால் அதன் கதவைத் திறந்தாள்.

உள்ளே பைல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கொத்தாக அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். நிம்மதியானாள். அவள் தேடி வந்த ரிசல்ட் கிடைத்துவிட்டது. ‘‘போகலாமா?’’ தன் பின்னால் நின்றிருந்த ரங்கராஜனை நோக்கி கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் அங்கிருந்த மைக்ராஸ்கோப்பை பார்த்துக் கொண்டிருந்தான். அதன் அருகில் இருந்த காகிதத்தில் சிறுநீரகங்கள் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் குறிப்புகள் கிறுக்கப்பட்டிருந்தன.

பரபரப்புடன் தேன்மொழி அதை எடுத்தாள். அப்போது சைலன்ட்டில் இருந்த ரங்கராஜனின் செல்போன் அதிர்ந்தது. எடுத்தான். மெசேஜ். படித்தான். படித்தாள். படித்தார்கள்.
‘கடை வாசலில் ஸ்காட் வில்லியம்ஸ் போலீசுடன் காத்திருக்கிறான்...’

‘‘டாக்டர் பட்டம் வாங்கின பிறகு தலைவர் தொல்லை தாங்க முடியலையா...
என்னாச்சு?’’‘‘கட்சியில இருக்கறவங்க எல்லாருக்கும், ‘கட்சித் தாவல் தடுப்பூசி’ போடுவேன்னு சொல்றாரு!’’

‘‘செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கு இந்த ஜோசியர் ஒரு லட்ச ரூபாய் வாங்கறாரா... அப்படி என்ன ஸ்பெஷல்?’’ ‘‘பரிகாரத் தகட்டை ராக்கெட்ல வச்சு செவ்வாய் கிரகத்துக்கே அனுப்புவாராம்!’’

‘‘கட்சி ஆபீஸ்ல திடீர்னு என்ன கணக்கெடுப்பு..?’’
‘‘மகளிரணியில இருக்கறவங்கள்ல தலைவருக்கு எத்தனை பேர் நெருக்கம்னு, அவரோட மனைவி கணக்கெடுப்பு நடத்தறாங்க!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

(தொடரும்)