தத்துவம் மச்சி தத்துவம்



நீ விரும்பற பொண்ணே உனக்கு மனைவியா வருவா...’’
‘‘பொய் சொல்றீங்க ஜோசியரே... நஸ்ரியாவுக்குத்தான் நிச்சயம் ஆயிடுச்சே!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘வர்ற தேர்தல்ல அதிகமான பணப்புழக்கம் இருக்கும் போலத் தெரியுது...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘வீடு வீடாகப் போய் வோட்டுக்குப் பணம் விநியோகிக்க திடகாத்திரமான வாலிபர்கள் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் வந்திருக்கு!
- கணேசன், புளியரை.

என்ன தலைவரே, அந்த ஆள் உங்ககிட்ட துடைப்பத்தைக் காட்டிட்டுப் போறாரு... நீங்க அமைதியா இருக்கீங்களே?’’
‘‘அவர் ‘ஆம் ஆத்மி கட்சி’க்கு ஓட்டு கேட்டுட்டுப் போறாருன்னு இல்ல நினைச்சேன்!’’
- எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.

நம்ம தலைவர் கூட்டணி பற்றி முடிவு எடுக்க ரொம்ப காலம் எடுத்துப்பார்...’’
‘‘அதுக்காக 2019 எலெக்ஷனுக்கு கூட்டணி பத்தி இப்பவே பேச ஆரம்பிக்கறது ரொம்ப ஓவர்..!’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

கம்பெனியில் ‘போர்டு’ மீட்டிங் நடத்தலாம்; ஆனா ‘சிலேட்டு’ மீட்டிங், ‘புத்தக’ மீட்டிங், ‘நோட்டு’ மீட்டிங் எல்லாம் நடத்த முடியாது!
- லவ்வரை மீட் பண்ண முடியாத ஏக்கத்திலும் தத்துவம் சொல்வோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.

‘‘நீங்க அமைச்சர் பதவியில இருந்தப்ப சொத்து சேர்த்தீங்களாமே..?’’
‘‘மூணு நாள்ல என்னத்தை பெரிசா சேர்த்திருக்க முடியும் மை லார்ட்..!
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.