காத்திருப்பு



வீட்டுக்கும் வாசலுக்குமாக ஏதோ நிலத்தை அளப்பவள் போல நடை பாவிக் கொண்டிருந்தாள் வைதேகி. நடையில் ஒரு பரபரப்பு. எதிர் வீட்டு மங்களம் தன் கணவர் சாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். ‘‘பாவம் வைதேகி... புருஷனுக்காக காத்திருக்காளோ..?’’
‘‘இல்லையே...

அவர் ஆபீஸ் வேலையா சேலம் போயிருக்கார். நாளைக்குத்தானே வருவார்!’’
‘‘அப்படின்னா அவ பிள்ளைக்காகக் காத்துக்கிட்டிருக்காளோ..?’’
‘‘அவ பையன்தான் காலேஜ் ஃப்ரெண்டு

களோட ‘பிக்னிக்’ போயிருக்கிறானே!’’
‘‘ஓ... அப்படியா? பின்னே அவ பொண்ணு மதுவுக்காக காத்திருக்கா போலிருக்கு!’’
‘‘அவதான் அவங்க அத்தை வீட்டுக்குப் போயிருக்காளே!’’

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது மோட்டார் பைக்கில் ஒரு ஆள் ‘ஹேண்ட் பேக்’கோடு வந்தான்.
‘‘வாங்க. எங்க வராம போயிடுவீங்களோன்னு நினைச்சேன். சீக்கிரம், அரை மணி நேரத்துல ‘டி.வி’யை சரி பண்ணுங்க. அந்த சீரியலைப் பார்த்தே ஆகணும். கோமதியோட மாமியார் பால்ல விஷம் கலக்கிற சீன்லயே ‘தொடரும்’ போட்டுட்டாங்க. மருமக குடிச்சாளா, தப்பிச்சாளான்னு இன்னிக்குத்தான் தெரியும்.’’
சாமா திகைத்துப் போனார்.           

எல்.மகாதேவன்