சுயேச்சைகள் காலம்!



காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பலவும் துளிர்விடும் பருவத்தில் இருந்த ஆரம்ப காலத்தில் சுயேச்சைகள்தான் ஆளுங்கட்சிக்கு மாற்றாக இருந்தார்கள். எந்தக் கட்சியுடனும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத பிரபலங்கள் பலரும், சுதந்திரப் போராட்ட வீரர்களும் சுயேச்சையாக நின்று வென்றனர்.

1952ல் நடந்த இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்த சுயேச்சைகள் 37 பேர். அப்போது எதிர்க்கட்சியான சி.பி.ஐக்கு 16 எம்.பி.க்கள்தான். 57ம் ஆண்டு தேர்தலில் ஜெயித்தவர்கள் 42 பேர். எதிர்க்கட்சியான சி.பி.ஐக்கு 27 எம்.பி.க்கள். ஆனால் காலப்போக்கில் இந்த டிரெண்ட் தேய்ந்துவிட்டது. ராஜீவ் மரணத்துக்குப் பின் நடந்த 91 தேர்தலில் ஜெயித்தது ஒரே ஒரு சுயேச்சை எம்.பி.தான். அதிலிருந்து இது ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கிறது. 

ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயித்த சுயேச்சை எம்.பிக்கள்:

1952    37
1957    42
1962    20
1967    35
1971    14
1977    9
1980    9
1984    13
1989    12
1991    1
1996    9
1998    6
1999    6
2004    5
2009    9

1996 தேர்தலில்தான் அதிக சுயேச்சைகள் போட்டியிட்டார்கள். மொத்தம் 10 ஆயிரத்து 636 பேர். அதன்பின் தேர்தல் டெபாசிட் கட்டணம் உயர்த்தப்பட்டதும் எண்ணிக்கை குறைந்தது. ஆனாலும் இப்போதும் மொத்த வேட்பாளர்களில் பாதி பேர் சுயேச்சைகள்தான்.

ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்ட சுயேச்சைகள்:

1952    533
1957    542
1962    479
1967    854
1971    1134
1977    1224
1980    2826
1984    3894
1989    3713
1991    5514
1996    10636
1998    1915
1999    1945
2004    2385
2009    3830

சமீப தேர்தல்களில் சுயேச்சைகளில் ஒரு சதவீதத்தினர்கூட டெபாசிட் வாங்குவதில்லை. அந்தக் கணக்கு:

தேர்தல்    போட்டியிட்ட சுயேச்சைகள்    டெபாசிட்வாங்கியவர்கள்
1998       1915                                                           17
1999       1945                                                           17
2004       2385                                                           15 
2009       3830                                                            25

ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு தேர்தல்களில் சராசரியாக விழும் வோட்டு சதவீதத்தை வைத்துக் கொண்டுதான் கூட்டணி பேரம் நிகழ்த்துகிறது. அந்தக் காலத்தில் சுயேச்சைகள், தமிழகத்தின் சில முக்கிய கட்சிகளை விடவும் அதிக வோட்டு சதவீதம் வைத்திருந்தார்கள். இப்போது இது 5 சதவீதத்தை ஒட்டி இருக்கிறது.

முக்கிய தேர்தல்களில் சுயேச்சைகள் வாங்கிய வோட்டு சதவீதம்:

1952    15.9
1957    19.32
1962    11.05
1967    13.78
1971    8.38
1977    5.5
1980    6.43
1984    7.29
1989    5.25
1991    4.01
1996    6.28
1998    2.37
1999    2.74
2004    4.8
2009    5.2