குங்குமம் ஜங்ஷன்






கலர்ஃபுல்  ஆட்டோகாரர்ஸ்!


ந்தியக் கலாசாரத்தை அறியும் நோக்கோடு பிரிட்டன், பெல்ஜியம், கனடா, அமெரிக்கா உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த 35 பேர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். 20 ஆட்டோக்களில் புத்தாண்டு அன்று பயணத்தைத் தொடங்கிய இக்குழுவில் 10 பெண்களும் அடக்கம். வழியில் உள்ள பழமையான கோயில்களில் வழிபடுவதோடு, நம்மூர் ஆட்டோ டிரைவர்களின் பிரச்னைகளையும் ஆராய்கிறார்கள். காக்கிச்சட்டை ஆட்டோ டிரைவர்களைப் பார்த்து சலித்துப்போன மக்கள், இந்த கலர்ஃபுல் ஆசாமிகளை வியப்புடன் பார்க்கிறார்கள்!

ஜூனியர் ரசிகர்!

தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தில் டெண்டுல்கர் செஞ்சுரிகளாகப் போட்டுத் தாக்குவதன் ரகசியம்? எத்தனையோ இருந்தாலும், அதில் முக்கியமான ஒன்று... அவரது ஜூனியர் அர்ஜுன் கூடவே இருப்பது! அப்பாவுடனே தினமும் நெட் பிராக்டீஸ் செய்யும் அர்ஜுன் தன் ஆசைகளைக் கொட்ட, அப்பா அள்ளுகிறார் செஞ்சுரிகளை!

காளான் சாமி!

வேப்ப மரத்தில் பால் வடிகிறது, அரசமரத்தில் சிலை முளைக்கிறது வரிசையில் காளானும் சேர்ந்திருக்கிறது. கோவை மாவட்டம் சிறுமுகை நால் ரோடு கிராமத்தில் வசிக்கும் ரங்கசாமி வீட்டு முன்னே, ஒரு காளான் முளைத்தது. மூன்று இலைகளைக் கொண்ட அந்தக் காளான் பெரிதாகிக்கொண்டே போக, மக்கள் பொட்டு வைத்து பூஜை செய்யத் தொடங்கி விட்டார்கள்! இப்போது காளான் சாமியைப் (?) பார்க்க வெளியூர்களில் இருந்தெல்லாம் கூட்டம். ‘‘இதே இடத்தில் கடந்த மாதம் ஒரு காளான் முளைத்தது. அதை பிடுங்கியதால் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. இது சாதாரண காளான் இல்லை. சக்தி மிகுந்ததுÕ’ என்று தலபுராணம் வாசிக்கிறார் ரங்கசாமி.

லஞ்ச ஒழிப்பு தீபாவளி!

ண்மைக்காலமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கி கைதாகும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. ‘லஞ்சத்தைச் சட்டபூர்வமாக்கிவிடுங்கள்’ என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே கொதிக்கும் அளவுக்கு நிலை மோசமாகி விட்டது. ஆனாலும், லஞ்ச அதிகாரிகள் எதற்கும் அஞ்சுவதில்லை. கடந்த வாரம், சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாட்சியர் சின்னுச்சாமி என்பவர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். இதை தீபாவளி அளவுக்கு வாழப்பாடி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள் என்பதில் இருந்து நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது புரியும்!

அமைதி வழி!

கா
ஷ்மீரை விடவும் அதிக தாக்குதல்கள், உயிரிழப்புகள் என 25 ஆண்டுகளாக அமைதியற்றுக் கிடக்கிறது அசாம். தனி நாடு கேட்டு போராடிவந்த ‘உல்ஃபா’ அமைப்பின் தலைவர்கள் அடைக்கலம் புகுந்தது வங்கதேசத்தில். ஆனால் கடந்த ஆண்டு அங்கு ஆட்சி மாறிய பிறகு, தலைமறைவாக இருந்த பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். ‘உல்ஃபா’ தலைவர் அரபிந்த ராஜ்கோவாவும் அவர்களில் ஒருவர். இப்போது அமைதிப் பேச்சு நடத்துவதற்காக அவரை விடுவித்திருக்கிறது மத்திய அரசு.

கல்லைத் தூக்கினால் வேலை!

முன்பெல்லாம் தென்மாவட்டங்களில் 100 கிலோ எடையுள்ள மாப்பிள்ளைக் கல்லைத் தூக்கித் தோளில் நிறுத்தினால்தான் பெண் தருவார்களாம். இப்போது அப்படி விதி இருந்தால் பல பேருக்கு கல்யாணம் ஆகாது. ஆனால், கல்லைத் தூக்கினால்தான் அரசாங்க வேலை கிடைக்கும் என்ற நடைமுறை இப்போதும் இருக்கிறது. நில அளவைத்துறையில் காலியாக உள்ள கள உதவியாளர் பணிக்கான தேர்வில்தான் இப்படியான சோதனை. 30 கிலோ எடையுள்ள குத்துக்கல் ஒன்றை தூக்கிக்கொண்டு 75 மீட்டர் தூரம் நடக்கவேண்டும். பலர் தூக்க முடியாமல் தடுமாறித் தவித்தனர்!  

10 லட்ச ரூபாய்!

விப்பேரரசு வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் தொகுப்பை முதல்வர் கலைஞர் வெளியிட்ட விழாவில் தமிழ்த் திரையுலகமே குவிந்திருந்தது. தன் திரைப்பாடல்களுக்காக வைரமுத்து பெற்ற விருதுகள் அனைத்தையும் மேடையில் காட்சிப்படுத்தி இருந்தார்கள். திரையுலகினருக்காக உருவாகும் கலைஞர் நகரில் நூலகம் கட்டுவதற்காக வைரமுத்து பத்து லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தது விழாவின் டச்சிங் தருணம்!

10 வயசு பட்டதாரி!

க்னோவைச் சேர்ந்த 10 வயது சுஷ்மா வர்மா, மழலை மேதைகள் பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறாள். ஆம், பள்ளிப்படிப்பை அதற்குள் முடித்துவிட்ட இவளுக்கு லக்னோ பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி சீட் கிடைத்திருக்கிறது. மிகக்குறைந்த வயதில் பட்டப்படிப்பு சேரும் சுஷ்மாவுக்காக விதிகளைத் தளர்த்தியிருக்கிறார்கள்.