2010க்கு முன்பு கோலிவுட்டை பரபரக்க வைத்த சில நடிகைகள் திடீரென்று கடந்த வருடம் மிஸ்ஸிங். அட... சினிமாவில்தாங்க! 'என்ன ஆனீங்க..?’ என்று ஒரு கேள்வியைப் போட்டு பதில் வாங்கினோம். (கடலைக்கு ஏதாவது சாக்கு வேணுமே..!)
நிலா‘ஜகன்மோகினி’ல பார்த்தது. நிலா நிலா ஓடிவான்னு பாடினாதான் வருவீங்களா..?’
‘‘என் ஃபேமிலி பிஸினஸான ஹோட்டல் நிர்வாகத்தில நான் செம பிஸி. நடிச்சாகணும்னு எந்த கட்டாயமும் இல்லை எனக்கு. இனி நடிப்பேனான்னு இப்ப சொல்ல முடியாது. அதுவரை என்பாட்டுக்கு இருக்கேன். உங்க ‘பாட்டு’க்கெல்லாம் வர்ற ஐடியா இல்லை..!’’
பூஜா‘தேசிய விருது கிடைச்ச ‘நான் கடவுள்’ நாயகி. அடுத்த வருஷம் ஆளையே காணோமே..?’
‘‘அதேதான் என் பிரச்னையும். ‘நான் கடவுள்’ல அருமையான நடிகைன்னு பேர் எடுத்தாச்சு. நடிக்க வரும்போதே கண்டிஷன் போட்டுத்தான் நடிக்க வந்தேன். போன வருஷம் சில கமிட்மென்ட்ஸ் வந்தும், ‘ஸாரி...’ சொல்லிட்டு நான் கேட்டது, ‘நான் கடவுள்’ மாதிரி நல்ல புராஜெக்ட் சொல்லுங்க...’ங்கறதுதான். இனிமேலும் எப்படி வேணுமானாலும் நடிக்க நான் தயாரில்லை. நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதை சொன்னா, எப்பவும் நான் ரெடி..!’’
அனன்யா‘நாடோடிகள் பாத்துட்டு ‘அடுத்த வருஷம் இந்தப்பொண்ணுதான்...’னு பெட் கட்டினோம். வாட் ஹேப்பண்ட்..?’
‘‘வந்ததே வாய்ப்புகள். ஒரு பெரிய ஹிட் கொடுத்திட்டு, வந்ததையெல்லாம் ஒப்புக்க மனசில்லை. அதனால சுப்ரமணியசிவா டைரக்ஷன்ல தனுஷ் கூட ‘சீடன்’ மட்டும் ஒத்துக்கிட்டேன். தனுஷோட வரிசையான கமிட்மென்ட்களால இந்த வருஷம்தான் இது ரிலீசாகும். அதுதான் கேப். இந்த கேப்ல மலையாளத்தில மோகன்லால்கூட ‘சிக்கார்’, மேஜர் ரவியோட ‘கந்தகார்’, அப்புறம் ‘இது ஞங்களோட கதா’ முடிச்சேன். ‘சிக்கார்’ செம ஹிட். அடுத்து தமிழ்ல ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிற படத்திலும், ‘அங்காடித்தெரு’ மகேஷ் ஜோடியா ஒரு படத்திலும் நடிக்கிறேன். போதுமா..?’’
சந்தியா‘தமிழ் பேசத் தெரிஞ்ச, நடிக்கத் தெரிஞ்ச நல்ல ஆர்ட்டிஸ்ட். ‘ஓடிப்போலாமா’வுக்குப் பிறகு எங்கே ஓடிப்போனீங்க..?’
‘‘நல்ல நடிகைன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ். அதையேதான் நானும் கேட்க விரும்பறேன். ஆனா இந்த இடைவெளில நான் சும்மா இல்லை. ரொம்பநாள் என்னை எதிர்பாத்துக்கிட்டிருந்த மலையாள இண்டஸ்ட்ரி பக்கம் போய் சுரேஷ்கோபி கூட ‘சகஸ்ரம்’, ‘கோலேஜ் டேஸ்’, ‘ட்ராஃபிக்’னு நடிச்சு முடிச்சேன். மூணும் ரிலீஸ் ஆகிட, இப்ப குஞ்சாக்கோ போபன், இந்திரஜித், ஜெயசூர்யா கூட ‘த்ரீ கிங்ஸ்’லயும், பெயர் வைக்காத இன்னொரு படத்திலும் நடிச்சுக்கிட்டிருக்கேன். இருந்தாலும் தமிழ்ப்படங்களை எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்...’’
ஷம்மு‘தேசிய விருதுப்படமான ‘காஞ்சீவரம்’ நாயகி... ஆர் யூ தேர்?’
‘‘ஹலோ... நீங்க ஊர்லதானே இருக்கீங்க..?
போன வருஷம்தான் ‘மாத்தி யோசி’ ரிலீசாச்சு. இப்ப ‘மயிலு’ ரிலீசுக்கான வேலைகள் நடக்குது. அடுத்து தெலுங்கில ‘மேங்கோ’, தமிழ்ல ‘கல்லாட்டம்’னு தயாராகிற படத்திலும், இன்னொரு புது டைரக்டர் படத்திலும் நடிச்சுக்கிட்டிருக்கேன். இடைப்பட்ட வேளைல இருக்கவே இருக்கு என்னோட பரதநாட்டிய போஸ்ட் கிராஜுவேஷன்..!’’
ஜோதிர்மயி‘குடும்பப்பாங்கான நடிகை. ‘நான் அவன் இல்லை’யில் கிளாமரிலும் மிரட்டியாயிற்று. இருந்தும் மிஸ்ஸிங்... ஏன்?’
‘‘எல்லாத்துக்கும் அடுத்த லெவல் ஆசைன்னு ஒண்ணு இருக்கும் இல்லையா..? ஏதேதோ வாய்ப்புகள் வரும்போது ஒத்துக்க மனமில்லை. அதோட நல்ல டைரக்டர், நல்ல நடிகர்கள் கொண்ட டீம் என் தேவை. இப்ப மலையாளத்தில நடிச்சுக்கிட்டிருக்கேன்.இங்கிலீஷ்லேர்ந்து தெலுங்குக்கு ரீமேக் ஆகற ஒரு ப்ராஜக்ட் கேட்டிருக்காங்க...’’
கடலைஜி