ஜோக்ஸ்



‘‘குருஜி! உங்களை மாதிரி நானும் முற்றும் துறக்க ஆசைப்படுறேன்...’’
‘‘சொன்னா கேளு! போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு இப்பல்லாம் ஆசிரமம் நடத்துறது ரொம்ப சிரமம்...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

என்னதான் ஒரு சைக்கிளை திரும்பத் திரும்ப ரிப்பேர் பண்ணி உபயோகப்படுத்தினாலும், அதையும் ‘பைசைக்கிள்’னுதான் சொல்ல முடியுமே தவிர, ‘ரீ சைக்கிள்’னு சொல்ல முடியாது.
- ஓட்டை சைக்கிளை வைத்து காலம் ஓட்டுவோர் சங்கம்
- கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘என்னய்யா இது? வந்ததுல இருந்து கூட்டம் கை தட்டிட்டே இருக்குது. பேசவே
விட மாட்டேங்கறானுங்க?’’
‘‘நான்தான் சொன்னேனே தலைவரே, பேசினதுக்கு அதிகமா துட்டு குடுக்காதீங்கன்னு!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

தத்துவம் மச்சி தத்துவம்

நகைப் பெட்டியில் நகையை வைக்கலாம்; பணப் பெட்டியில் பணத்தை வைக்கலாம்; பழப் பெட்டியில் பழத்தை வைக்கலாம். ரயில் பெட்டியில் ரயிலை வைக்க முடியுமா?
- வித்தவுட்டில் பயணம் செய்து வித்தியாசமாய் சிந்திப்போர் சங்கம்
- பெ.பொன்ராஜபாண்டி, மதுரை.

‘‘தலைவர் எதுக்கு நான்கு மைக் கேக்கறார்..?’’
‘‘ஒவ்வொரு கட்சியையும் ஒவ்வொரு மைக்ல திட்டுவாராம்..!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘நம்ம தலைவரை காது குத்தல் விழாவுக்கு கூப்பிட்டதுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டாரு...’’
‘‘ஏன்..?’’
‘‘எலெக்ஷன் டைம்ல மட்டும்தான் அவரு காது குத்த வருவாராம்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘நூறு ரூபாய் தர்மம் செய்தால் ஸ்பெஷல் சலுகைன்னு போர்டு வச்சிருக்கியே... அதென்ன சலுகை?’’
‘‘தர்மம் பண்றதை செல்ஃபி எடுத்து, நீங்க விளம்பரம்
தேடிக்கலாம்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.