குட்டிச்சுவர் சிந்தனைகள்



சாந்தமா இருந்த நாடு முழுக்க இப்போ Anthemமா கிடக்கு. தனுஷின் சச்சின் Anthem, சிம்பு வின் லவ்  Anthem மட்டுமில்ல... இன்னும் மோடி Anthem, மொட்டை மாடி Anthemனு  பசுவுக்கு புல்லுக்கட்டு வைக்கிறவன்ல இருந்து, கொசுவுக்கு குட் நைட்டு வைக்கிறவன் வரை  Anthemமா எழுதித் தள்ளுறாங்க. அடுத்த ஒன்றரை மாசம் நம்மள கட்டிப் போடப் போற ஐ.பி.எல்லுக்கு நாம ஏன் ஒரு  Anthem எழுதக் கூடாது?

கூலான டிவில்லியர்ஸ் கூட நிற்பான் கோலி
அவன கொஞ்சம் சீண்டி விட்டா உங்க டீம் காலி
கெயில் புயல் சிக்ஸெல்லாம் பறக்கும் பல மீட்டர்
பவுலிங் போடுற பாப்பாக்களுக்கு காட்டுவான்டா வாட்டர்

இது பெங்களூரு டீமு, அட பேட்டிங்ல ஆட்டம் பாமு
ஆடு சிக்குனா ஆடுவாங்க ஆக்ரோஷ கேமு
பம்பாய் பாட்சாவாட்டம் பொளக்கும் யுவராஜ்சிங்கு
அவன் ஆறு பாலுக்கு ஆறு சிக்சடிச்ச அட்டகாச கிங்கு

சுண்டு விரல்ல சுனாமிய கொண்டுவரும் தாஹிர்
ஸ்டம்ப்ஸ்க்குள்ள குண்டு வைப்பான் நம்ம ஜாகிர்
நேத்து வரை காத்து போன பலூனாட்டம் டெல்லி டீமு
இப்போ ஹார்லிக்ஸ் குடிச்ச ஹனுமாராட்டம் கில்லி டீமு
மேக்ஸ்வெல்லு சிங்கம் சூர்யாவாட்டம் வெளுப்பான்

ஜார்ஜு பெய்லி மங்காத்தா அஜித்தாட்டம் சிரிப்பான்
செஞ்சுரிக்கே சிக்ஸர் அடிக்கிறவன் ஷேவாக்கு
இப்படி பஞ்சாப் டீமுக்கு பல பேரு போஷாக்கு
கட்டிப்புடி வைத்தியத்துக்கு பிரீத்திதானே கேரண்டி

பஞ்சாப்பு பேட்டிங் புடிச்சா பவுலருக்கு இல்ல வாரண்டி
காம்பீர் மனிஷ் பாண்டே ராபின் ஊத்தப்பா
எந்த டீமு வந்தாலும் ரன் மழைய சாத்தப்பா
மோர்கல் பவுலிங் போட்டா தீப்பொறிதான் பறக்கும்

யூசுப் பதான் பேட்டிங் செஞ்சா எரிமலையே வெடிக்கும்
பந்துலயே ஆடுவான் உமேஷ் யாதவ் மங்காத்தா
கொடி புடிச்சு வருதுய்யா ஷாருக்கானோட கொல்கத்தா
கத்தி ஜீவானந்தமா நின்னு ஆடுவான் சாம்சன்
கத்தி கதிரேசனா தொங்க விடுவான் வாட்சன்

ரஹானேதானே விக்கெட் நிறுத்தும் சுவரு
ஸ்டீவ் ஸ்மித்தெல்லாம் தவுசண்ட் வாட்ஸு பவரு
ராஜஸ்தான் ஓனருதான் அக்கா ஷில்பா ஷெட்டி
ஹல்லா போல் அணி ரொம்ப கெட்டி
புல்லு முளைச்சோ கல்லு முளைச்சோ இருக்கட்டும்டா பிட்சு

எல்லாத்துலயும் போடுவான்டா டேல் ஸ்டெய்ன் ஸ்கெட்சு
வார்னர் தவான் ஓபனிங் பேட்டிங் கோட்டை
எதிரணிக்கு வார்னிங்கே இல்லாம போடுவாங்க ஓட்டை
வாரே வா இது சார்ஜு ஏறின சன் ரைசர்ஸ் ஐதராபாத்

செமி பைனல் உறுதினு போடுங்கடா இந்த வருஷம் ஜிந்தாபாத்
மும்பையோட கேப்டனா வரான்டா ரோஹித் ஷர்மா
ரெண்டு தடவ 200 அடிச்ச அவன் கெத்து வருமா
பொலார்டு பேட்டிங்கெல்லாம் ரயில விட வேகம்

மலிங்கா பவுலிங்கெல்லாம் புயல போல போகும்
அம்பானி டீமுக்கு மொத்த பாலிவுட்டும் சப்போர்ட்டு
மும்பை டீம முடிஞ்சா பைனல் போகாம நிப்பாட்டு
ஸ்மித்து மெக்குல்லம் ஹஸ்சியோட ரெய்னா

மஞ்ச சொக்கா போட்டு நிற்கும் சிக்சர்களின் நைனா
அணிய பைனலுக்கு எப்பவுமே ஏத்திவிடும் ஏணி
அது தலைக்கெல்லாம் பெரிய தல எங்க தல தோனி
கொளுத்தாத பட்டாசெல்லாம் கொளுத்திவிட்டு வெடிங்க
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க

ஆல்தோட்ட பூபதி