சேவைக்கு ஏது கைமாறு?




அடிக்கிற வெயிலில் ஏற்கனவே மண்டை காய்ந்திருக்கும்போது 2,64,701,00,00,000 ரூபாய் கடனில் தமிழகமே தத்தளிக்கும் தகவலைப் போட்டு கிறுகிறுக்க வச்சிட்டீங்களே!
- இரா.வளையாபதி, கரூர்.

அன்று ஏகப்பட்ட திரைப்படங்களில் நம்மை கண்கலங்க வைத்த சரிதா, இன்று பேட்டி மூலமும் ஃபீல் பண்ணவே வைத்திருக்கிறார். அவர் குடும்ப சிக்கல் விரைவில் தீர பிரார்த்திக்கிறோம்!
- சி.விஜயலட்சுமி, தஞ்சாவூர்.

தெலுங்குப் படம் (அய்யோ... வாயில் நுழையலையே) ஒன்றை டப்பிங் செய்து, அஞ்சலியையும் சமந்தாவையும் தமிழ் பேச வைக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜாவின் சேவைக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்! (ஆனந்தக்கண்ணீர்!)
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தேசிய விருது பெற்ற ‘புலி மனிதன்’ சுப்பையா நல்லமுத்துவின் பேட்டி விலங்குகளின் வாழ்க்கைப் ப(£)டம் போலவே இருந்தது. வாழ்த்துகள்!
- மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

நகரங்களில் தன் மனிதர்களைத் தொலைத்த கிராமம்... அவர்களின் நகல்களான பொம்மைகளால் அதை நிரப்பி சுற்றுலா மனிதர்களை ஈர்ப்பது காலத்தின் விந்தையல்லாமல் வேறென்ன?
- எஸ்.ஜானகி, உடுமலைப்பேட்டை.

வாழ்வாதாரத்திற்கு மிகத் தேவையான நீராதாரத்தை அரசியல் ஆக்கக் கூடாது. நீரும் உணவும் இல்லாமல் நீரும் நானும் இல்லை என்பதை ஏன் அண்டை மாநிலங்கள் அறிவதில்லை?
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

‘அழியாத கோலங்கள்’ பகுதியில் ஜெமினி கணேசனை பெண்களே தேடி வந்தார்கள் எனப் பெருமை பேசிய சாருஹாசன், அதே காதல் மன்னன் படுகஞ்சம் என்ற உண்மையையும் ஒளிக்காமல் சொன்னது ஓஹோ!
- எஸ்.ராமன், சென்னை-41.

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு நடிகர் விவேக் வடித்துள்ள இரங்கற்பா ரொம்பப் பொருத்தம்! சிரிக்க வைக்கும் விவேக்கிற்குள் இப்படி ஒரு கவிஞரா?
- என்.சண்முகப்பிரியா, சிவகாசி.

நம் உடலுக்குப் பொருந்துகிற உணவில் சைவம், அசைவம் என்ற பிரிவு களே இல்லை என்பதை ‘கிச்சன் டூ கிளினிக்’ தொடர் அருமையாக
எடுத்துக் காட்டியது. பாராட்டுக்கள்!
- எஸ்.நவீன்சுந்தர், முத்தரசநல்லூர்.

6-4-2015 தேதியிட்ட ‘குங்குமம்’ இதழில், ‘எங்கேயோ பார்த்த முகம்’ பகுதியில் பேட்டி அளித்திருக்கும் டி.நாராயணமூர்த்தி என் சகோதரர். எனக்கும் அவருக்கும் சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அவர் ‘வீட்டிற்கு ஒரே பிள்ளை’ எனப் பேட்டியில் தெரிவித்திருப்பது முற்றிலும் தவறானது!
-த.பரமசிவம், பொன்னவராயன்கோட்டை