ஜோக்ஸ்




‘‘இந்த வாரத்துக்கு பதிலா, அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் ஆகப்போறேன்னு சொல்றீங்களே... உடம்பை பார்த்துக்கிட்டு போகப் போறீங்களா?’’
‘‘ம்ஹும்! அடுத்த வாரம் புதுசா வரப் போற நர்ஸைப் பார்த்துட்டுப் போறேன் டாக்டர்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

தத்துவம் மச்சி தத்துவம்

நீதிபதி எவ்வளவு ஒல்லியா இருந்தாலும் அவரை ‘கனம் நீதிபதி அவர்களே’ன்னுதான் சொல்லணும். ‘ஒல்லி நீதிபதி அவர்களே’ன்னு
சொல்லக்கூடாது!- ஒல்லியாய் இருந்தாலும் குண்டு குண்டாய் தத்துவம் சொல்வோர் சங்கம்
- பெ.பொன்ராஜபாண்டி, மதுரை.

‘‘தலைவர் ஏன் மேடையில மூட் அவுட் ஆனார்..?’’
‘‘மக்களுக்காக பல குரல் கொடுக்க நான் தயங்க மாட்டேன்னு இவர் சொன்னதும், எம்.ஆர்.ராதா மாதிரி பேசச் சொல்லி
யாரோ துண்டுச்சீட்டு கொடுத்தாங்களாம்...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘இந்த வீட்ல இவர் எப்போதிருந்து சமையல்காரரா இருக்கார்..?’’
‘‘எனக்குத் தாலி கட்டினதிலேர்ந்து!’’
 ஏ.நாகராஜன், சென்னை-75.

‘‘என்னய்யா இது? கூட்டத்துல கொஞ்சம் பேர் கை தட்டுறாங்க... கொஞ்சம் பேர் கைதட்டாம இருக்காங்க!’’
‘‘பிரியாணியில் பீஸ் கிடைச்சவங்க கை தட்டுறாங்க. வெறும் குஸ்கா கிடைச்சவங்க கைதட்டலை
தலைவரே!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘குற்றப்பத்திரிகையைப் படிச்சதும் தலைவர் குஷியா இருக்காரே... என்ன விஷயம்?’’
‘‘அதுல வருட ராசி பலனும், ஜாமீன் கிடைக்க பரிகாரமும்
போட்டிருந்தாங்களாம்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

மாணவர்கள் எல்லா கோர்ஸும் படிக்கலாம். ஆனால் ரேஸ் கோர்ஸைப் படிக்க முடியுமா?
- தத்துவக் குதிரையில் ஏறி சிட்டாய் பறப்போர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.