Like and Share



அண்ணே ஒரு விளம்பரம்...

ஆபீஸில் வயசான ஒரு மெம்பர் தன் டேபிளை க்ளீன் பண்ணிக்கொண்டிருக்கிறார். ‘‘என்ன சார், டேபிள் சேஞ்சா?’ என ஒரு பெண் யதார்த்தமாகக் கேட்க, இன்றோடு தான் ரிட்டயர் ஆகப் போவதைச் சொல்கிறார். ஆபீஸில் யாருமே இது தெரியாமல் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண் அவரோடு ஒரு செல்ஃபி எடுத்து அவர் விடை பெறப்போகும் தகவலையும் வாட்ஸப்பில் பகிர்கிறார்.

அது தீயாகப் பரவ, ஆபீஸே திரண்டு நின்று அவருக்கு ஒரு ‘செண்ட் ஆஃப் சர்ப்ரைஸ்’ கொடுக்கிறது. வோடபோன் இன்டர்நெட்டுக்கான விளம்பரம்தான் என்றாலும் இன்றைய வாழ்வில் பக்கத்து டெஸ்க் மனிதரிடம் கூட பேசாமல் நாம் வாட்ஸப்பில் மூழ்கிக் கிடக்கும் நிதர்சனத்தை உள்குத்தாய் உணர்த்துகிறது இந்த கமர்ஷியல்!

கேரளாவைச் சேர்ந்த காமெடியனும் பாடகருமான கென்னத் செபாஸ்டியன், ட்விட்டரில் தனது ஃபாலோயர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். ‘குத்துமதிப்பாக ஏதாவது வார்த்தைகளைக் கொடுங்கள்...

அதையெல்லாம் கோர்த்து ஒரு பாட்டு ரெடி பண்ணுகிறேன்’ என்பதே அது. இரண்டே மணி நேரத்தில் ஆயிரம் வார்த்தைகள் வந்து குவிய, சில மணி நேரங்களில் பாடல் ரெடி. ரசம், பாயசம், பானிபூரி என ஏகப்பட்ட வார்த்தைகளின் கோர்வையான ‘சிட்டிங் ஆன் எ டாய்லெட்’ என்ற அந்தப் பாடலுக்கு ரெஸ்பான்ஸ் அள்ளுகிறது. தமிழ்ப் பாட்டைவிட ஈஸியா இருக்கே!

வாட்ஸப் கீஷீஷ்..!!

நான் வீட்டுக்கு லேட்டா போனேன். அப்பா கோவமா, ‘எங்கடா போயிருந்தே?’ன்னு கேட்டார். ‘ஃப்ரெண்ட் வீட்ல இருந்தேன்’னு சொன்னேன். அவர் நம்பல. என் நண்பர்கள் பத்துப் பேருக்கு அவரே போன் போட்டார்.முதல் நாலு பேருமே... ‘‘எங்க வீட்லதான் இருந்தான் அங்கிள்... இப்பத்தான் கிளம்பினான்!’’னாங்க.அடுத்த அஞ்சு பேரு... ‘‘இங்க தான் இருக்கான் அங்கிள்...

சின்ஸியரா படிக்கறான்! கூப்பிடவா?’’ன்னானுங்க. பாசக்காரப் புள்ளைங்க.கடைசியா ஒருத்தன் எல்லாரையும் மிஞ்சிட்டான். போனை எடுத்ததுமே அவன், ‘‘சொல்லுங்க டாட்... என்ன மேட்டர்?’’னு கேட்டான்... என் குரல்ல!

(அவன்தாண்டா என் பார்த்தா!)

அப்பா‘டெக்’கர்


கூகுள் மேப் எந்த இடத்துக்கும் வழி சொல்லும். ஆனால், சாப்பிடும் இடத்துக்கு மட்டும் வழி சொல்ல ஒரு ஸ்பெஷலிஸ்ட் வேண்டுமல்லவா? அதுதான் ஜொமட்டோ! நாம் நிற்கும் இடத்தைச் சுற்றி என்னென்ன ரெஸ்டாரன்ட்கள் உள்ளன, அங்கே என்னென்ன ஸ்பெஷல் அயிட்டங்கள் சாப்பிடக் கிடைக்கும், அதன் விலை என்ன, அங்கே இன்டீரியர் எப்படி, நாம் சாப்பிடத் தகுதியான இடம்தானா, எந்த டேபிள் காலியாக இருக்கிறது என சகலத்தையும் புட்டுப் புட்டு வைக்கிறது ஜொமட்டோ.

இதுமாதிரி ஆப்கள் உலகம் முழுவதும் எக்கச்சக்கம். ஆனால் இந்த ஆப் இந்தியத் தயாரிப்பு என்பதால் நம்ம ஊர் இண்டு இடுக்குகளையும் தெரிந்து மோட்டல், மெஸ் வரை மெனு தருகிறது. சிக்கன் பக்கெட் முதல் தரை டிக்கெட் வரை இறங்கி அடிப்பதால் இப்போது இது செம ஹிட்டு!