ஜோக்ஸ்



‘‘ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க வந்திருக்கும் எங்கள் தலைவர், ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஒரு செல்ஃபி எடுத்து தன்னுடைய தைரியத்தையும், வீரத்தையும் நிரூபிப்பார் என்பதை...’’

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ஒருத்தர் ஐயப்ப பக்தரா இருந்தாலும், அவரும் ஜல்லிக்கட்டை, ‘ஜல்லிக்கட்டு’ன்னுதான் சொல்ல முடியுமே தவிர, ‘பள்ளிக்கட்டு’ன்னு சொல்ல முடியாது...
- ஜல்லிக்கட்டு ரணகளத்திலும் தத்துவம் யோசிப்போர் சங்கம்

என்னதான் மாட்டுப் பொங்கலா இருந்தாலும் அதையும் மனுஷன்தான் செய்யணுமே தவிர, மாட்டால எல்லாம் செய்ய முடியாது!
- மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் சாப்பிட்டுக்கொண்டே யோசிப்போர் சங்கம்

‘‘அந்த கஸ்டமர் ஏதோ கேட்டதும் சர்வர் இவ்வளவு டென்ஷன் ஆகிட்டாரே... அவர் அப்படி என்னதான் கேட்டார்?’’
‘‘சாப்பிட தனக்கு மாட்டுப் பொங்கல்தான் வேணும்னு கேட்டிருக்கார்..!’’

‘‘நீங்கள் எல்லோரும் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டு இருப்பீர்கள்... வெண் பொங்கல் சாப்பிட்டு இருப்பீர்கள்... மிளகுப் பொங்கல் சாப்பிட்டு இருப்பீர்கள்... எங்கள் தலைவரைப் போல ஜெயில் பொங்கல் சாப்பிட்டிருப்பீர்களா என்று உங்களைக் கேட்க விரும்புகிறேன்!’’


‘என் மனைவி செய்யற பொங்கல் பட்டாசா இருக்கும்...’’
‘‘அவ்வளவு நல்லாவா இருக்கும்..?’’
‘‘நீ வேற! ரொம்ப ஆபத்துன்னு சொல்ல வந்தேன்...’’

கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘பொ ங்கல் அன்னைக்கு தலைவர் கட்சிக்காரங்க எல்லோருக்கும் பொங்கல் கொடுத்தார்னு சொன்னா ஏன் நம்ப மாட்டேங்கறே...?’’
‘‘அவர் வழக்கமா எல்லோருக்கும் அல்வாதானே கொடுப்பார்?!’’