வலைப்பேச்சு



டீச்சருக்கு படிச்சா டாக்டராக முடியாது; ஆனா டாக்டருக்கு படிச்சா டீச்சராகலாம் (மெடிக்கல் காலேஜ்ல)!
- குமரேஷ் சுப்ரமணியம்

குழந்தை மகிழ்ச்சியுடன் விளையாடுவது உன் பெருமூச்சுகள் நிறைந்திருக்கும் பலூனுடன்
- கலாப்ரியா

‘‘2016 நல்லா இருக்கும்...’’‘‘எப்படிச் சொல்றீங்க..?’’‘‘16 நல்ல நம்பர்பா, பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கன்னு வாழ்த்துவாங்க!’’
‘‘இங்கிலீஷ்லகூட ஸ்வீட் சிக்ஸ்டீன்னு சொல்லுவாங்க!’’‘‘சரிங்க மொதலாளி!’’
- கனவுப் பிரியன்

புத்தாண்டு காலண்டரைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டது, குப்பையில் கிடந்த சென்ற வருட காலண்டர்.
- அம்புஜா சிமி

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் ஒரு பேச்சாளர் கேட்டார், ‘‘இங்கு தன் மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்!’’
ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர். பேச்சாளர் கேட்டார், ‘‘ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியோட சொர்க்கம் போக ஆசையில்லையா?’’
‘‘என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்ங்க. அதுக்கப்புறம் பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’’

@googelgovind 
இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு ஜீன்ஸ், லெக்கின்ஸ்க்கு சிறப்புக் கட்டணம் வசூல் பண்ண, அனுமதி கொடுத்திருவாங்க பாருங்க...
# ஆகம விதி அப்படித்தான் இருக்கு!

மேலே போகும் எதுவும் கீழே விழ வேண்டும் என்பது நியூட்டனின் விதி மட்டும் அல்ல, மனிதரின் தலைவிதியும்!
- செல்லி சீனிவாசன்

எலெக் ஷன் வருது. யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க. மூஞ்சில சுண்ணாம்பு அடிச்சு ‘ரிசர்வுடு’ன்னு எழுதிட்டு போயிருவாங்க...
- சமூக ஆர்வலர் ரவுடி

மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் இதுவரை 1096 கி.மீ சீரமைக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு!
ஒருவேளை பாதை சரியில்லாததால் ‘டேக் டைவர்ஷன்... டேக் டைவர்ஷன்’னு பக்கத்து மாநிலத்துல உள்ள ரோட்டை சீரமைச்சிட்டு வந்திருப்பாங்களோ!
- இளையராஜா அனந்தராமன்

மெளனம் மிக வலுவான ஆயுதம். அதை தொட்டதற்கெல்லாம் பயன்படுத்துவது சிறப்பல்ல.
- பட்டுக்கோட்டை பிரபாகர் பிகேபி

உலகத்துல லவ் பண்ணா கல்யாணம் பண்ணுவாங்க. ஆனா இந்தியால எதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணுவாங்க தெரியுமா?
1) துணைக்கு ஆள் வேணும்
2) அம்மா - அப்பாவை பாத்துக்க
3) சமைக்க, துணி துவைக்க
4) வயசாயிடுச்சுல்ல, அதனால கல்யாணம் பண்ணணும்!
5) வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டான். அடுத்து அதானே...
6) மூணு பொண்டாட்டிக்கு புள்ளை இல்லை. அதான் நாலாவதா...
7) பிள்ளைய பாத்துக்க ஆள் வேணும்
8) கல்யாணம் பண்ணாதான் வேலை கிடைக்கும்னு ஜோசியர் சொன்னார்.
9) இந்த தைக்குள்ள பண்ணலைன்னா காலம் முழுக்க கன்னிதானாம்
10) கல்யாணம் பண்ணா பைத்தியம் சரி ஆகிடும்...
அடேய்...

- சரவ் யுஆர்எஸ்

ஆப்கானிஸ்தானில் கலந்து கொண்ட பிரதமர், அழையா விருந்தாளியாக பாகிஸ்தான் சென்று விட்டு, இந்தியா வந்தார்... நன்றிக்கடனை உடனே காட்டிவிட்டார்கள். ஆப்கானிஸ்தானில் 20 நிமிடம் இந்திய தூதரகம் மீது தாக்குதல். இந்தியாவில் 2 நாட்கள் இடைவிடாத தாக்குதல்!
- குமரன் கருப்பையா

அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் இல்ல... உண்மையான கொள்கையை பரப்பும் செயலாளர்!
அம்மாவே எப்போதோ ஒரு தடவதான் தலைமைச் செயலகம் வர்றாங்க. பேனர் வச்சு வரவேற்க வேணாமா?
வெள்ளத்துல சாகல... வேடிக்கை பாக்க வந்ததுலதான் 500 பேர் செத்தாங்க.

திமுக மேல இப்டில்லாம் குறை சொல்லிதான் ஆட்சியை பிடிச்சோம்... எதிராளியை வீழ்த்த என்ன வேணா செய்யலாம்னு சொல்லியிருக்காங்களே... இன்னும் சொல்வோம், ஆட்சியைப் பிடிப்போம்!எங்களுக்குன்னு ஒரு கருத்தும் கிடையாதே. அம்மா கருத்தே எங்க கருத்து.
வெள்ளத்துக்காக போகணுமா... ஓட்டு கேக்கக்கூட நாங்க போகலையே. 2 இடத்துலதான் அம்மாவே பேசினாங்க. அம்மாவுக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்குல்ல.கூட்டணி பத்தி பேசறது அம்மாவோட ராஜதந்திரம்ங்க!

- ஷர்மிளா ராஜசேகர்

@_Sangeethaa_
சட்டென்று தீர்ப்பெழுதி வார்த்தைகளால் சாட்டை வீசிச் சென்றுவிடுகிறார்கள், வலியும் வேதனையும் தெரியாத வக்கிரபுத்திக்காரர்கள்...

@DisisPK
வாழ்க்கைல கவலையில்லாம சந்தோஷமா இருக்கோம் என்பதை புன்னகை, ஆடை, பணம், படிப்பு, வேலை... இதைவிட படுத்தவுடனே வரும் தூக்கம்தான் தீர்மானிக்கிறது!

@iyyanars 
இளநியை ‘ஸ்ட்ரா’ வச்சு உறிஞ்சுவது, பெண்ணின் நிழலை முத்தமிட்டுத் திருப்தியடைவது போன்றது!

@Thilip53 
தவிக்கும்போது தண்ணீர் குடிக்கும் மனிதர்கள் மத்தியில், பசிக்கும்போதும் தண்ணீர் குடித்து வாழ்கின்றனர் பலர்!

ஆடு, கோழிக்கு அடிபட்டு கஷ்டப்படுறதைப் பார்க்கும்போது ‘இந்தியன்’ படத்துல வரும் மனீஷா கொய்ராலா கேரக்டர் உள்ளே புகுந்திடுது. ஆடு, கோழியை குழம்பு வச்சு சாப்பிட உட்காரும்போது ‘முனி’ படத்தில் வரும் ராஜ்கிரண் கேரக்டர் உள்ளே புகுந்திடுது.
- வெ.பூபதி

ஆடு, கோழிக்கு அடிபட்டு கஷ்டப்படுறதைப் பார்க்கும்போது ‘இந்தியன்’ படத்துல வரும் மனீஷா கொய்ராலா கேரக்டர் உள்ளே புகுந்திடுது. ஆடு, கோழியை குழம்பு வச்சு சாப்பிட உட்காரும்போது ‘முனி’ படத்தில் வரும் ராஜ்கிரண் கேரக்டர் உள்ளே புகுந்திடுது.
- வெ.பூபதி

@MeeraTwits 
நினைவுகள் எப்பொழுதும் வித்தியாசமானவை... சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்; அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும்!

@Baashhu 
தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று காதலியும், தன்னைக் காதலிக்க வேண்டுமென்று மனைவியும் ஆசைப்படுகிறார்கள்!

@GOVINDARAJEN 
நான் சுயம்பு என பெருமை கொள்ளாதீர்கள். காலையில் நீங்கள் அருந்திய ஒரு கோப்பை காபியில் ஆயிரக்
கணக்கானோரின் உழைப்பு அடங்கியுள்ளது.

@deebanece
பக்கத்துல இருக்க நமக்கு வாய்ஸ் மெசேஜ், டெல்லியில இருக்க பிரதமருக்கு கடிதம்...
# இதச் சொன்னா நம்மள...

வைகோ மைண்ட் வாய்ஸ்: ஆஹா! திரும்பவும் நம்மகிட்டயே வந்திடுவாப்பல போல! ‘தாய் உள்ளம் வரவேற்கிறது’னு ஒரு அறிக்கை விட்டுடலாமா!?
நாஞ்சில் மைண்ட் வாய்ஸ்: கனவுல கூட நடக்காது! நல்லா இன்னோவாவுல போய் பழகிட்டேன். உங்ககூட சேர்ந்தா நடக்க வெச்சேல்ல சாவடிப்பீங்க!
- விது ஹாசன்

@gpradeesh 
இந்த ஆட்சியப் பத்தி வேற எத சாதனைனு சொல்லி, எப்புடித்தான் தம் கட்ட முடியும்?
# நாஞ்சில் சம்பத்தா இருந்து பாத்தாதான் அதோட நியாயம் புரியும்!

@rajsenthil615 
‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’... இந்தப் பழமொழி இனி
வரும் காலமும் இருக்கும். ஆனா இனிவரும் காலத்தில் காற்று வீசுமா என்றே தெரியாது!

6000 மதுக்கடைகளை பால் விற்கும் மையங்களாக மாற்ற உத்தரவிட்டார் முதல்வர்!
# ஷாக்கை கொற... ஷாக்கை கொற... தமிழகத்தில் இல்ல, பீகாரில்!

@vandavaalam 
நாளையும் கனவில் வருவேன் என்கிறாய்... என் ஆயுளில் ஒருநாள் கூடுகிறது.

மனைவிக்கும், மழைக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா..?
இந்த ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்னு ஏங்குவோம்...
வந்தா, ஏண்டா வந்ததுனு புலம்புவோம்!

@raajaacs 
முதல் வார்த்தையிலேயே நின்று விட்டேன். வாக்கியம் என்னைத் தாண்டிப் போய்விட்டது.

@Sakthivel_Talks 
மேடையில் வந்து வேடத்தை மறந்த நடிகன் போல் விழிக்கிறேன், இந்த பூமிக்கு வந்த காரணம் புரியாமல்..!