மாலை நேரத்து மயக்கம்!



விநோத ரஸ மஞ்சரி

குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் ரோட்டில் விழுந்து கிடந்தால், அவன் பேர் குப்பன், சுப்பன், முனியாண்டியாகத்தான் இருக்கும். அந்த ஏரியா, வியாசர்பாடி, ராயபுரம், காசிமேடாகத்தான் இருக்கும் என்பதெல்லாம் நம்ம நினைப்பு. இதோ, கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தன்று பார்ட்டிகளில் மப்பு ஏறி மட்டையாகிக் கிடக்கும் வெள்ளைக்காரர்கள்.

இத்தனைக்கும் இது அஜால் குஜால் அமெரிக்கா அல்ல... உலகையே ஒரு குடையின் கீழ் ஆண்ட டிசிப்ளின் டிஸ்டில்டு வாட்டர் இங்கிலாந்தில்தான் இந்த நிலைமை. இத்தனைக்கும் நம்ம சென்னையைப் போல லண்டன் நகரமும் கடும் வெள்ளத்தில் மிதந்திருந்தது. அடுத்த வாரமே இவர்கள் மிதந்திருக்கிறார்கள். ‘வெள்ளக்காரன்னா டீசன்டு’ என இனி யாராவது சொல்வீர்கள்?


- ரெமோ