ஜோக்ஸ்



‘‘தலைவர் ‘ஹாட்ரிக்’ அடிச்சிட்டாரா... எதுல?’’
‘‘கடந்த மூணு வருஷமா தொடர்ந்து புழல் ஜெயில்ல பொங்கல் கொண்டாடுறாரே!’’
- பி.ஜி.பி. இசக்கி, அம்பாசமுத்திரம்.

‘‘தலைவர் எதுக்கு அவர் மனைவி பண்ண ெபாங்கலை கட்சி ஆபீஸுக்கு எடுத்துக்கிட்டு போறாரு..?’’
‘‘போஸ்டர் ஒட்டறதுக்காம்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘பொங்கல் வந்தா உன் மனைவியின் போக்குல மாற்றம் தெரியுமா... எப்படி?’’
‘‘பூரிக்கட்டைக்கு பதிலா, என்னை கரும்பாலயே அடிப்பா!’’

‘‘இந்த வருஷம், மழை, வெள்ள பாதிப்புகளால...’’‘‘என்ன ஆச்சு?’’
‘‘மாட்டுப் பொங்கல் மாதிரி, ‘போட்’டு பொங்கலும்
கொண்டாட வேண்டியதா போச்சு!’’

‘‘தன் மீட்டிங்குக்கு கூட்டமே வராததால, தலைவர் மனதளவுல பாதிக்கப்பட்டிருக்காரா... எப்படிச் சொல்றே?’’
‘‘காணும் பொங்கல் அன்று கடற்கரையில் மீட்டிங்னு அறிக்கை விட்டிருக்காரே..!’’

என்னதான் குறைஞ்ச விலையில வாங்கின மாட்டை வச்சு பொங்கல் கொண்டாடினாலும், அதையும் ‘மாட்டுப் பொங்கல்’னுதான் சொல்லுவாங்க... ‘அடி மாட்டுப் பொங்கல்’னு சொல்ல மாட்டாங்க!
- மச்சினி கடித்துக் கொடுத்த கரும்பை, மனைவிக்குத் தெரியாமல் சாப்பிடுவோர் சங்கம்

‘‘தன் மீட்டிங்குக்கு கூட்டமே வராததால, தலைவர் மனதளவுல பாதிக்கப்பட்டிருக்காரா... எப்படிச் சொல்றே?’’
‘‘காணும் பொங்கல் அன்று கடற்கரையில் மீட்டிங்னு அறிக்கை விட்டிருக்காரே..!’’

‘‘ஜல்லிக்கட்டுக்கும் கால்கட்டுக்கும் என்ன வித்தியாசம்..?’’
‘‘ஜல்லிக்கட்டுல மாட்டை நீ அடக்குவே...
‘கால்கட்டு’ ேபாட்டா, மனைவி உன்னை அடக்குவா!’’