ஜோக்ஸ்



‘‘நான் பொங்கல் வெச்சதும் எங்கே கிளம்பிட்டீங்க..?’’
‘‘போய் கலெக்டர்கிட்ட நம்ம வீட்டை ‘வெல்லம்’ பாதித்த பகுதியா அறிவிக்கணும்னு ஒரு மனு தந்துட்டு வந்துடறேன்..!’’

தத்துவம் மச்சி தத்துவம்

சுகர் கேனைப் பிழிஞ்சி சுகர் எடுக்கிறாங்க என்பதற்காக, யாரும் வாட்டர் கேனைப் பிழிஞ்சி வாட்டர் எடுக்க மாட்டாங்க!
- கரும்பைப் பிழிந்து தத்துவச் சாறு எடுப்போர் சங்கம்

‘‘தலைவர் வீட்ல பொங்கல் இனாம் வாங்கப் போனவங்க ஏன் கடுப்பா போறாங்க?’’
‘‘ரூபாய் நோட்டுல தலைவரு ஸ்டிக்கர் ஒட்டி இருக்காம்!’’
வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘என்னய்யா இது... உன்னோட கடையில மட்டும் எல்லா கரும்பும் பயங்கரமா வளைஞ்சிருக்கு?’’
‘‘இது எல்லாமே அமைச்சர் தோட்டத்துல விளைஞ்சதுங்க...’’

‘‘மாப்பிள்ளை...  என் சம்சாரம் வச்சிருக்குற பொங்கலை சாப்பிடச் சொல்லி உங்களைக்  கட்டாயப்படுத்த மாட்டோம். தயவுசெய்து செல்போன் டவர்ல இருந்து கீழே  இறங்கி வாங்க!’’

‘‘என்னய்யா இது... குற்றப்பத்திரிகை கூட கரும்பும், மஞ்சள் கொத்தும் கொடுத்துட்டுப் போறாங்க..?’’
‘‘இது பொங்கல் சிறப்பு மலராம் தலைவரே..!’’

ஸ்பீக்கரு...

‘‘போகிப் பண்டிகைக்கு கொளுத்த எவ்வளவோ பழைய பொருட்கள் இருக்கும்போது, எங்கள் தலைவரின் படம் போட்ட பேனர்களையும், கட் அவுட்களையும் தேடிப் பிடித்துக் கொளுத்தும் எதிர்க்கட்சியினரின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்!’’