டியர் டாக்டர்




இதழுக்கு இதழ் அட்டைப் படத்திலேயே பீதியை உண்டாக்கும் டெக்னிக் உங்களைத் தவிர யாருக்குமே வராது. பின்னே பாருங்களேன்... சமையல் ஆயில்களில் உள்ள கலப்படங்களைச் சொல்லி நல்ல விழிப்புணர்வும் தந்திருக்கிறீர்கள். நன்றி!
- சிம்மவாஹினி, வியாசர்பாடி, கே. அனுராதா, நாகர்கோயில், பி. ரவிக்குமார்,

கும்பகோணம்.  ஆதலினால் காதல் செய்வீர் - காதலில் ஈடுபடுபவர்கள் மற்றவர்களை விட இளமையாக இருக்கிறார்கள் என்கிற
(மருத்துவ) செய்தி ஆச்சர்யம்...!  அதிசயம்!!
- மயிலை கோபி, சென்னை -  83

 ‘காய் கனி இருக்க கலோரி கவர்ந்தற்று’  நீரிழிவாளர்களுக்கு குங்குமம் டாக்டர் தந்த வரப்பிரசாதம்.
- பொ.செல்வி, கோயம்புத்தூர்.

 ‘குட் நைட்’ எனச் சொல்லிவிட்டு பலரின் தவறான (Bad Night) இரவுகளை அலசிய விதம் சூப்பர்..!
- ந.அண்ணாதுரை, திருச்சி.

 சர்ச்சைக்குரிய விஷயமே ஆனாலும் கருணைக் கொலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருப்பது மனதிற்கு இதமாக இருந்தது.
- கலா ராஜன், பாளையங்கோட்டை.

 மழையால் வரும் காய்ச்சல், சளி, இருமல் இவற்றுடன் ‘ஹெபடைடிஸ் ஏ’ எனப்படும் மிகக் கொடிய தொற்று நோயையும் சந்திக்க நேரிடும் என்பது வரும் முன் காக்க வேண்டிய எச்சரிக்கை மணி.
- பா.நந்தினி, சேலம்.

 கெட்ட கனவு கண்டு பலநாட்கள் இரவில் பயந்து நடுங்கி இருக்கிறேன். அது, தூக்கமின்மையால் வரும் பிரச்னைதான் என்பதை தூக்கத்தில் அமுக்கும் பேய் மூலம் விளக்கி இருப்பது சூப்பர்.
- பா.கதிரேசன், துறையூர்.

 குடும்பம் மற்றும் சமூக புறச்சூழல்கள் காரணமாக ஒருசில ஆண்களுக்கு பெண்களையே பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது என உளவியல் ரீதியாக அலசி இருப்பது யோசிக்கவைக்கிறது.
- தெ.நாச்சியாள், தேவக்கோட்டை.

 கண்களில் பாதிப்பு இருப்பது தெரிந்தும் அழகு உள்பட ஏதோ காரணங்களுக்காக கண்ணாடி போடுவதைத் தவிர்ப்பது காலப்போக்கில் பார்வையை பெரிதும் பாதிக்கும் என உணர வைத்தமைக்கு நன்றி.
- பெ.மரியா, முக்கூடல்.

 குடும்ப வன்முறைகளில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் குடியால் பாதிக்கப்பட்டவர்களே. அவர்களிடம் கோபம், எரிச்சல் படக்கூடாது. ஆறுதலாக இருப்பதன் மூலமே அவர்களை திருத்த முடியும் என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டி ஒன்று.
- தி.செல்லத்துரை, திருவைகுண்டம்.

 காலத்தால் மறைக்கப்பட்ட நம் வைத்திய முறைகள் நவீன மருத்துவ முறைகளுக்கு அடித்தளம் என கல்லாதது உடலளவு தொடரில் இந்திய மருத்துவத்தின் வாழ்வும் சாவும் கட்டுரையில் புரியவைத்தமைக்கு நன்றி.
- பா.சுடலை முத்து, செஞ்சி.