தண்ணீர் ரேஷன்



நம்ம ஊர் போல காலி குடங்களோடு போராட்டம் நடத்தாதது மட்டுமே குறை. மற்றபடி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக பருவமழை பொய்த்து கடும் வறட்சி.

எல்லோரும் தங்கள் தண்ணீர் பயன்பாட்டை 35 சதவீதம் குறைத்துக்கொள்ளுமாறு அரசு உத்தரவு. மீறுகிறவர்களுக்குக் கடும் அபராதம். அந்த மாகாணத்தில் இப்படி உத்தரவு போடுவது இதுவே முதல் முறை. படத்தில் இருப்பது, கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸ் பகுதி சொகுசு வீடுகள்!