நம்பினால் நம்புங்கள்




*‘சயின்டிஸ்ட்’ என்ற வார்த்தை, முதன்முதலில் 1833ம் ஆண்டில்தான் பயன்படுத்தப்பட்டது.

*ஒவ்வொரு 2 வினாடிகளிலும், உலகில் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

*நெல்சன் மண்டேலா சிறையில் கழித்த 27 ஆண்டுகளும், கல் தரையில் லேசான துணியை விரித்துத்தான் உறங்கினார்.

*சூரியனிலிருந்து பெறுவதைக் காட்டிலும் அதிக ஒளியை நெப்டியூன் உமிழ்கிறது.

*விண்வெளியில் செயல்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

*நெதர்லாந்து மக்களே உலகில் அதிக அளவு காபி அருந்துகின்றனர். சராசரியாக  ஒரு நபருக்கு ஒவ்வொரு நாளும் 2.4 கப்.

*லண்டன் மாநகருக்கு உள்ளேயே 300க்கும் அதிக மொழிகள் பேசப்படுகின்றன.

*காமெடியன்கள் மற்றும் வேடிக்கையாகச் செயல்படுபவர்களில் பலர் பொதுவாக மன அழுத்தத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*ரோம சாம்ராஜ்யத்தோடு சேர்ந்து அழிந்த கான்க்ரீட் தொழில்நுட்பம், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டது.

*சிகரெட் புகைப்பதை விட, சிகார் மற்றும் பைப் ஸ்மோக்கிங் ஆகியவை அதிக ஆபத்தானவை.