வார்த்தை ஜாலம்



இது இங்லீஷு குண்டக்க மண்டக்க!

‘குண்டக்க மண்டக்க’ மாதிரி ரைமிங்கா இருக்கிற வார்த்தைகள் ஆங்கிலத்திலும் உண்டு. இதில் சிறப்பம்சம் என்னன்னா, இந்த மாதிரி வாய்க்கு வந்தாப்ல இருக்கிற வார்த்தைகளுக்கும் தனிப்பட்ட அர்த்தங்கள் உள்ளன. அதில் சிலது உங்களுக்காக இங்கே!

ஏதோ லொள்ளு பிடிச்ச ஆளை சொல்றது மாதிரி இருக்கும். ஆனால், அசாத்திய திறமை வாய்ந்த மனிதரையோ, அருமையான பொருளையோ, அற்புதமான சம்பவத்தையோ குறிப்பதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். உதாரணமா... ‘It’s a lollapalooza, just like your other books’ (உங்களோட மற்ற புத்தகங்களை மாதிரியே இந்தப் புத்தகமும் அற்புதம்!)

ஏதாவது ஒரு கலந்துரையாடல் / விவாதம்  நடக்கும் போது சிலர் தன்னுடைய முடிவை சொல்லும் விதம் மிகவும் ஆணித்தரமாகவும் சரியான தீர்வாகவும் இருக்கும். இப்படி புத்திசாலித்தனமாக சரியான முடிவை தெளிவாச் சொல்றதுக்கு பேருதான் Sockdolager. உதாரணமா... ‘His retort was unquestionably correct, a true sockdolager of an answer’... அப்படின்னா இந்தக் கேள்விக்கு அவருடைய பதில் மிகவும் சரியானது... பொருத்தமானதுன்னு அர்த்தம்!

ஒரு இடத்துக்கு போகணும்னா நேரா போகாம குறுக்கால கோணல் மாணலா போறதுக்கு பெயர்தான் Catawampus. குடிச்சிட்டு பலர் இப்படிதானே தடுமாறி கோணல் மாணலா நடக்குறாங்க சுத்தமா குழம்பி / கலைந்து போன ஒரு பொருளையும் இப்படி சொல்லலாம். ‘Your tie is catawampus; let me straighten it for you’ (உன் டை கோணல் மாணலா இருக்கு... இரு நான் சரி பண்ணி விடுறேன்.)

அடுத்தவங்களை சாமர்த்தியமா ஏமாத்தும் முறைக்குதான் இந்தப் பெயர். உதாரணமா... ரெட் வாஷிங்டன்னு ஒரு ஆப்பிள் கிடைக்குது நம்மூரில். அது என்ன அமெரிக்காவில் இருந்தா வருது?! நம்ம சிம்லாவில் இருந்து வரும் இந்த ஆப்பிளை ஏமாத்தி விற்கும் இந்த ஏமாற்று
வியாபாரம்தான் Hornswoggle.

உச்சரிக்கும் போது பூ பூன்னு வாயில் காத்துதான் வரும். ஆனா, இந்த வார்த்தை தேவைக்கு அதிகமான அளவில் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு துணியையோ, கட்டிடத்தையோ குறிக்கும். ஒண்ணுமே இல்லாத ஒண்ணை ரொம்ப பந்தாவா புகழ்வதையும் இந்த வார்த்தை குறிக்கும். அதாங்க சுருக்கமா சொல்லணும்னா, ‘வெத்துவேட்டு’க்கு மறுபெயர் தான் Foofaraw.

(வார்த்தை வசப்படும்!)