அதுக்கு இதுதான் பேரு!



-தீபா ராம்

Tsundoku சுடோகோ மாதிரி இருக்குதுல்ல இந்தப் பேரு... சிலர் வீடு நெறைய புஸ்தகம் நெறஞ்சு கெடக்கும்... வாங்கின புஸ்தகமெல்லாம் அடுக்கி வெச்சா அலமாரி கொள்ளாது... இவ்ளோ இருந்தாலும் அவுங்க புதுசு புதுசா புஸ்தகம் வாங்கிட்டே இருப்பாங்க...இதுல முக்கியமான விஷயம் என்னன்னா இவ்ளோ புஸ்தகங்கள் இருந்தாலும் எதையுமே அவுங்க படிக்க மாட்டாங்க ;) இப்படி புஸ்தகமா வாங்கி குவிச்சு படிக்காம இருக்கிற பழக்கத்திற்கு பேருதான் Tsundoku.



Parea வாரம் முழுக்க வேலை செஞ்சு களைச்சு போச்சுன்னா என்ன செய்வோம் ?! நமக்கு பிடிச்ச நண்பர்களை சந்திச்சு அளவளாவி பொழுதுபோக்குவோம்... இப்படி ஒரு குழுவா நண்பர்கள் எல்லாம் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சேர்ந்து ஒருத்தரோட ஒருத்தர் கருத்துகளை பரிமாறி, அவுங்களுக்கு புடிச்ச விஷயங்களை பேசி பொழுது போக்கும் நிகழ்வுக்கு பேருதான் parea. சுருக்கமா சொல்லணும்னா நம்ம காலேஜ் பசங்க பாஷையில “ரொம்ப போர் அடிச்சா மச்சி எல்லாரும் ஒன்னுகூடி மொக்கை போடுவோம்.”

Braggart நான் அப்படியாக்கும் இப்படியாக்கும் அப்படின்னு எப்போ பாரு சில பேரு தாங்க சாதிச்ச விஷயத்தை பத்தி பெருமையா பீத்துவாங்க... இப்படி தாங்க முடியாத அளவுக்கு பெருமை பீத்தும் அலப்பரைகளை குறிக்கும் சொல்தான் braggart. Valuta  வெளிநாட்டில் currency ஒன்றை நாம இந்தியாவில் கொண்டு வந்து மாத்தறோம்னு வெச்சுக்கோங்க, அப்போ இந்திய மதிப்பில் அந்த வெளிநாட்டு currency என்ன மதிப்பு வருதோ அந்த விலையை தான் valutaனு சொல்லுவாங்க...

அதாவது, currency conversion எனப்படும் ரூபாய் மாற்றும் முறையில் கடைசியில் இந்திய மதிப்பில் நமக்கு கிடைக்கும் பணத்தை குறிக்கும் சொல்தான் valuta. (இங்கு எடுத்துக்காட்டுக்கு இந்திய கரன்சி சொல்லிருக்கேன், பொதுவா எந்த கரன்சி மாத்தினாலும் கடைசியில் வரும் பணத்தின் மதிப்பு valuta).

Simon- Pure அக்மார்க், ஐ.எஸ்.ஐ. முத்திரை எல்லாம் ஒரு பொருளின் உன்னதமான கலப்படம் அற்ற தன்மையை குறிக்க பயன்படுத்துவோம் இல்லையா... அதுபோல ரொம்ப நேர்மையான, உண்மையான, இயல்பான விஷயங்களோ, மனுஷங்களோ “ரொம்ப நல்ல ஆஆஆஆ வங்கன்னு” சொல்றதுக்கு பயன்படுத்தும் சொல்தான் Simon- Pure.

Gesundheit சின்ன குழந்தைங்க தும்மும் போது நம்மூருல நூறு, முந்நூறு அப்படின்னு விளையாட்டா சொல்லுவதை பார்த்திருப்போம். அதுபோல தும்மும் போது உனக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் அப்படின்னு வாழ்த்தும் அடைமொழிதான் Gesundheit. Bimble காலாற ரிலாக்ஸ் பண்ணிகிட்டே நடப்பது ஒரு சுகம். அந்த சந்தோஷ நடைக்கு பேருதான் Bimble.

Feuillemort காய்ந்து உதிரும் போது இலை ஒரு பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்குமில்லையா அந்த நிறத்துக்கு பேருதான் Feuillemort. Fika   காபி குடிக்கும் போது கூட சேர்த்து இனிப்பு சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கா?! அப்படி இருந்தால் அந்த பழக்கத்துக்கு பேருதான் Fika.

Logastellus சிலருக்கு நெறையா வார்த்தைகள் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு ஆசை இருக்கும். அதுக்காக முயற்சி எடுத்து கத்துக்குவாங்க. ஆனாலும் அவுங்களுக்கு கத்துகிட்ட பாதி வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் தெரியாது...இப்படி ஒரு “தெரியும் ஆனா, தெரியாது” ரெண்டுங்கெட்டான் நிலைக்கு பேருதான் Logastellus.

Magoa ஏதோ ஒன்னை நெனச்சு மனசு வெறுத்து போய் சோகம் கப்பின முகத்தோடு, வாழவே பிடிக்காம திரிவாங்க சிலர்... நம்ம கூட அதை கிண்டலா ‘தேவதாஸ்’ மாதிரின்னு சொல்லுவோம்...இப்படி சோககீதம் இசைக்கும் பழக்கத்துக்கு பேருதான் Magoa. Redamancy நம்மளை விரும்பும் மனுஷங்களை நாமளும் ரொம்ப நேசிக்கும் பழக்கத்துக்கு பேருதான் Redamancy. சிலருக்கு வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் மேல அவ்ளோ Redamancy இருப்பதை கூட பார்த்திருப்போம்.

Fernweh  ரொம்ப நாலா வீட்டில அடைஞ்சு கிடந்தா எப்படா எங்கடா போலாம்னு ஒரு ஏக்கம் வரும். இப்படி ஒரு பயணத்துக்காக ஏங்கி கிடப்பதுக்கு பேருதான் Fernweh. Saudade நாம ரொம்ப நேசிச்சவங்க இல்லாம போனா அவுங்க திரும்பி வர மாட்டாங்கன்னு மூளைக்கு தெரிஞ்சாலும், அவுங்களை ஒரு முறை திருப்பி சந்திக்க மாட்டோமா அப்படின்னு ஒரு ஏக்கம், குருட்டுத்தனமான எதிர்பார்ப்பு தோணும்.

அந்த பாச உணர்ச்சிக்கு பேருதான் Saudade. சிலரின் இறப்பு இந்த உணர்ச்சியைத் தூண்டும்...அதுவும் எல்லாருக்குமே இந்த saudade அனுபவம் கண்டிப்பா வந்திருக்கும். Livsnjutare வாழ்க்கையை ரசிச்சு அதன் முழு சுகத்தை அனுபவிச்சு வாழும் மனுஷங்களுக்கு பேருதான் Livsnjutare. சின்ன குழந்தைகளுக்கு மட்டுமே வாய்த்த வரமிது... என்ன ஸ்கூல் போகவேண்டாம், படிக்க வேண்டாம், எப்போ பாரு வெளயாடி களிக்கலாம்.

Mizpah  நல்லா பழகிவிட்டு கடைசியில் பிரிஞ்சு போன ஒருத்தர் மேலதான் நமக்கு பாசம் பொங்கும். அந்த பாச ஃபீலிங்க்ஸ்க்கு பேர்தான் Mizpah. mizpah மை ஃபிரண்ட்ஸ் :(  Kilig அட... தமிழில் கூட கிளுகிளுப்பு அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கிறது உங்களுக்கு தோணலாம்... அதேதான் ரொமான்டிக் ஆக எதையாது பார்த்தாலோ, அனுபவிச்சாலோ ஏற்படும் அந்த ‘செம குஷி’க்கு பேருதான் Kilig. Tacenda சில உண்மைகளை சொல்றதை விட சொல்லாததே மேல் அப்படின்னு நினைப்போம். இது போல அமைதியா சில நிஜங்களை சகித்து வெளிய சொல்லாம இருப்பதுதான் tacenda.

(வார்த்தை வசப்படும்!)