ப்ரியங்களுடன்...



‘கொஞ்சம் காபி... நிறைய பேச்சு...’ முழுக்க முழுக்கப் பெண்களைக் கொண்டே இயங்கும் கஃபே. தன்னம்பிக்கையின் பிம்பமாகத் திகழ்கிறது. இயக்குநர் பிரசன்னா அவர்களுக்குப் பாராட்டுகள். ‘வானவில் சந்தை’ வாழ்க்கையில் வண்ணங்களைக் கூட்டும் விதமாய் திகழ்கிறது.
- எஸ். வளர்மதி, கன்னியாகுமரி.

விமானம் ஓட்டுவதிலிருந்து விமானம் உதிரிப் பாகங்கள் தயாரிப்பதுவரை பெண்கள் புகுந்து சாதனை புரிந்து வருவது மெச்சத்தக்கது. இன்னும் பல பெண்கள் இத்துறைக்கு வர வேண்டும். பாதுகாப்பான துறைதான் என்பதை அவர்கள் உறுதிப்படுத்துவது புதியவர்கள் வருகைக்கு உந்துசக்தியாய் இருக்கும் என்பது நிஜம்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

இந்தியாவின் ஒரே பெண் ஜாக்கி ரூபா அவர்களது சாதனைகளை படித்ததும் மிகவும் பெருமையடைந்தேன். மேலும் இந்தியப் பெண்களையும் பெருமைப்பட வைத்திருந்தது.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

‘வெயில் காலத்தில் செய்ய வேண்டியவை’ பற்றி எடுத்துச் சொல்லி ‘மேனி அழகு கூட்ட டிப்ஸ்’ தந்தது - பேரழகு!
- மயிலை கோபி, அசோக்நகர்.

‘வாள் சண்டையில் ராணி’ படித்து நெகிழ்ந்து மகிழ்ந்து போனேன். ‘இந்தியாவின் ஒரே பெண் ஜாக்கி’ பற்றிய செய்திகள் மிக மிக அருமை. பெண்களின் பேராற்றலை வெளிப்படுத்திய குங்குமம் தோழிக்கு கோடான கோடி நன்றிகள். பெண்களின் பெருமையை வெளிப்படுத்துவதில் குங்குமம் தோழியின் கடமையைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சிக் கொள்கிறேன்.
- சு. இலக்குமணசுவாமி, மதுரை-6.

இங்கிலாந்து ராணியின் அரண்மனைகள் மட்டுமல்ல... ஸ்காட்லாந்து அரண்மனை, வடக்கு அயர்லாந்து கோட்டை இவைகளை பார்க்கும்போது பிரமிப்புதான் ஏற்பட்டது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு நிறுவனங்களே பொறுப்பு என்பதற்கிணங்க வழங்கப்பட்டுள்ள சலுகைகளில்  பெண் பணியாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவதை ஐ.டி. கம்பெனிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
- வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவிந்திரன், நாகர்கோவில்.

30 வகை உருளைக்கிழங்கு ஸ்பெஷல் ரெசிபிகளில் எதை சாப்பிடுவது, எதை விடுவது என்றே தெரியவில்லை. படிக்கும்போதே நாவில் சுவையூறுகிறது.
- ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா சாத்தூர்.