ஸ்கூட்டர் ஓட்டுபவரா நீங்கள் ?



கொளுத்தும் வெயிலில் ஸ்கூட்டர் ஓட்டுபவரா நீங்கள், அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க என்கிறார் தோல் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு. வெயில் காலங்களில் தரமான மெல்லிய காட்டன் உடைகளையே அணிய வேண்டும். முகத்தில் வெயில் படாதவாறு,  தரமான லேசான துணியைக்கொண்டு முகத்தை மறைத்துக்கொள்வது நல்லது. இப்படி முகத்தை மூடுவதால் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் ‘டி’ கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலை வேண்டாம்.

ஒரு வாரத்தில் 2 அல்லது 3 முறை நமது உடலில் படக்கூடிய சூரிய ஒளியால் கிடைக்கக்கூடிய விட்டமின் ‘டி’ அளவே போதுமானதாக இருக்கிறது என்கின்றன ஆய்வுகள். இது தவிர, நம் அன்றாட உணவில் கேரட் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்வது தோலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள விட்டமின்கள் உடலுக்கு மட்டுமின்றி தோலில் வரக்கூடிய வியாதிகளை தடுக்கும்.

- ஜெ.சதீஷ்