கேக் பால்ஸ்



என்னென்ன தேவை?

ஸ்பாஞ்ச் கேக் - 1 1/2 கப் (தூளாக்கியது),
கோகோ பவுடர் - 1/2 கப்,
தேன் அல்லது சாக்லெட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
உருக்கிய வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், ஐசிங் சுகர் - 1 டேபிள்ஸ்பூன்.

அலங்கரிக்க...

கோகோ பவுடர், கலர் ஸ்பிரிங்கில்ஸ், விருப்பத்துக்கு ஏற்ப தூளாக்கிய ஏதாவது ஒரு பாதாம் அல்லது பிஸ்தா பருப்பு, சாக்லெட் சேமியா - எல்லாமே ரோல் பண்ண தேவையான அளவு. அலங்கரிப்பதை உங்கள் விருப்பத்துக்கேற்ப செய்து கொள்ளலாம். சாக்லெட்டை உருக்கி கேக் பால்களை அதில் முக்கி எடுக்கவும். இல்லையெனில் மேல் பகுதிக்கு பவுடராக்கிய சர்க்கரையை உபயோகிக்கலாம்.

எப்படிச் செய்வது?  

கேக்கை கைகளால் நன்கு தூளாக்கவும். ஒரு பாத்திரத்தில் தூளாக்கப்பட்ட கேக், உருக்கிய வெண்ணெய், தேன் அல்லது சாக்லெட் சாஸ், கோகோ பவுடர், ஐசிங் சுகர் அனைத்தையும் நன்கு கலந்து மாவு பதத்துக்கு கொண்டு வரவும். இந்த மாவை 30 நிமிடம் குளிர வைக்கவும். பிறகு இதிலிருந்து சின்ன எலுமிச்சை அளவு மாவை எடுத்து மென்மையாக உருண்டை செய்யவும்.

பிறகு கலர் ஸ்ப்ரிங்கில்ஸ், கோகோ பவுடர், சாக்லெட் சேமியா, பாதாம் அல்லது பிஸ்தா ஆகியவற்றை கொண்டு மேலே அலங்கரிக்கவும். உங்கள் விருப்பத்துக்கேற்ப டாப்பிங்க்ஸ் செய்து ஒவ்வொரு பாலையும் ரோல் செய்யவும். ஒரு மணி நேரம் குளிர வைத்து பின்பு பரிமாறவும்.