சாக்லெட் பன்னகோட்டா



என்னென்ன தேவை?

ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப்,
பால் - 50 மி.லி.,
தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்,
சைனா கிராஸ் - 1 கிராம்,
நறுக்கிய குக்கிங் சாக்லெட் - 100 கிராம்,
சர்க்கரை - 50 கிராம்,
வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?  

ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க விட்டு சைனா கிராஸ் சேர்க்கவும். சைனா கிராஸ் தண்ணீருடன் நன்கு கலந்து கரையும் நிலைக்கு வரும் வரை கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் க்ரீம், பால், சர்க்கரை சேர்த்து மிதமான தீயில், இந்தக் கலவை கரையும் வரை கொதிக்க வைக்கவும். இத்துடன் நறுக்கிய சாக்லெட், வெனிலா எசென்ஸ் இரண்டையும் கலந்து சாக்லெட் முழுவதுமாக உருகும் வரை கலக்கவும். பிறகு கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி 4 மணி நேரம் குளிர வைக்கவும்.