பீநட் பட்டர் எனர்ஜி பார்ஸ்



என்னென்ன தேவை?

 ஓட்ஸ் - 1 கப்,
கார்ன்ஃப்ளேக்ஸ் - 1/2 கப்,
தேன் - 1/4 கப் + 2 டேபிள்ஸ்பூன்,
பீநட் பட்டர் - 1/4 கப்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்,
பாதாம், பிஸ்தா, வால்நட் - 1/2 கப்,
உலர் பழங்கள் (திராட்சை, அத்தி, பேரீச்சை) - 1/4 கப்.   

எப்படிச் செய்வது?  

ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், நட்ஸ், உலர் பழங்கள் எல்லாவற்றையும் வெறும் கடாயில் நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். தனியே எடுத்து
வைக்கவும். கடாயில் வெண்ணெயை உருக்கவும். இத்துடன் தேன், பீநட் பட்டர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொப்புளித்து வரும் வரை சூடாக்கவும். சூடானதும், வறுத்த ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ், நட்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும். எல்லாம் நன்கு சேர்ந்து கலந்துள்ளதா என்று சரி பார்க்கவும். பிறகு இந்தக் கலவையை ஒரு பட்டர் பேப்பரில் நன்கு பரப்பவும். ஸ்பூன் அல்லது மரக்கரண்டியால் 1/4 இஞ்ச் அளவுக்குப் பரப்பவும். நுனிகளை சீராக்கி, துண்டுகளாக வெட்டவும். ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.