யோகர்ட் - கிரானோலா பார்ஃபெய்ட்



என்னென்ன தேவை?

கிராநோலா - 1 கப் (ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்),
யோகர்ட் (கெட்டித் தயிர் பழக் கலவை) - 1 1/2 கப், (எந்தப் பழ ஃப்ளேவராக இருந்தாலும் உபயோகிக்கலாம். பழத்தை நன்கு ஸ்மூத்தாக அரைத்து தயிருடன் கலக்கவும்),
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
நறுக்கிய நட்ஸ் - 2 டீஸ்பூன்,
தேன் - 1 டேபிள்ஸ்பூன்.  

எப்படிச் செய்வது?  

தயிரை விஸ்க்கால் நன்கு கலக்கவும். விருப்பப்பட்டால் ஸ்ட்ராபெர்ரி அல்லது மேங்கோ ப்யூரியை இத்துடன் கலந்து கொள்ளலாம். சர்க்கரை சேர்த்து வேகமாகக் கலக்கவும்.
தயிரை நன்கு கடைந்ததும் அதை ஒரு மஸ்லின் துணியில் கட்டி அதிகப்படியான தண்ணீரை வடித்து விடவும். இப்போது முதல் லேயருக்கான யோகர்ட் ரெடி.
இப்போது பரிமாறப் போகிற கண்ணாடி டம்ளர்களை எடுத்து வைக்கவும். முதல் லேயராக யோகர்ட்டை ஒரு ஸ்பூன் எடுத்து டம்ளரில் சேர்க்கவும். பிறகு கிராநோலா சேர்த்து அதன் மேல் நட்ஸ் சேர்த்து அதன் மேல் தேன் சேர்க்கவும். இதன் மேல் யோகர்ட் பழக் கலவையை சேர்க்கவும். இதே போல் தொடர்ந்து செய்து கப் முழுவதும் நிறைக்கவும். வேண்டுமென்றால் குளிர வைத்து பரிமாறவும்.