பிரெட்  குலாப் ஜாமூன்



என்னென்ன தேவை?

மில்க் பிரெட் - 7 ஸ்லைஸ்,
பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்,
பால் - 1/2 கப்,
ரோஸ் எசென்ஸ் - 1 துளி,
எண்ணெய் - தேவைக்கேற்ப.

சர்க்கரைப் பாகுக்கு...

சர்க்கரை - 1/2 கப்,
தண்ணீர் - 1/2 கப்,
ஏலக்காய் - 2.

எப்படிச் செய்வது?  

பிரெட்டின் நான்கு முனைகளையும் நீக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய் போட்டு தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும். இது கொதிக்கும் நேரத்தில் நாம் பிரெட் உருண்டைகளை தயாரித்துக்கொள்ளலாம். சர்க்கரைப் பாகு நன்கு பிசுபிசுப்பு தன்மைக்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். அது சூடாக இருக்கும்போதே ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும்.

ஒவ்வொரு பிரெட்டையும் பாலில் தோய்த்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்து மிக்ஸியில் போடவும். இத்துடன் பால் பவுடர் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு நன்கு அரைக்கவும். அரைத்ததை சின்ன உருண்டைகளாக உருட்டவும். ரொம்பவும் அழுத்தாமல் உருட்டவும். உருண்டைகள் மென்மையாக இருக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறத்துக்குப் பொரித்தெடுக்கவும்.

உருண்டைகளை திருப்பிப் போட்டு பொரிக்கவும். அப்போது தான் எல்லா பக்கமும் பொன்னிறமாக பொரியும். பிறகு உருண்டை களை எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைத்து மிதமான சூட்டில் உள்ள சர்க்கரைப் பாகில் போடவும். ஜாமூன்கள் எல்லாம் சர்க்கரைப் பாகில் நன்கு ஊறும் வரை வைக்கவும்.(2 மணி நேரம்). சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.