ஷீர் குருமா



என்னென்ன தேவை?

 முழு கொழுப்புள்ள பால் -2 1/2 கப்,
மெல்லிய சேமியா - 1/4 கப்,
சர்க்கரை - 1/8 கப்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - 5,
திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்,
பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா - 1/4 கப்.   

எப்படிச் செய்வது?  

பால் நன்கு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைக்கவும். வெதுவெதுப்பான பாலில் பேரீச்சம் பழம் சேர்த்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் வெண்ணெய் காய்ச்சி, நட்ஸ் மற்றும் திராட்சையை சேர்த்து நன்கு பிரவுன் நிறம் வரும் வரை வறுக்கவும். தனியாக வைக்கவும். அதே கடாயில் சேமியாவைச் சேர்த்து நன்கு பிரவுன் நிறம் வரும் வரை வறுக்கவும். அதில் பாதி பாலை சேர்த்து சேமியாவை வேக விடவும். சேமியா நன்கு வெந்தவுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். இத்துடன் மீதி பாலை சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். கெட்டியாக மாறியதும் இத்துடன் வறுத்த பருப்புகள், பேரீச்சம் பழம், ரோஸ் எசென்ஸ் சேர்த்துக் கிளறி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.