மேங்கோ ஸ்ரீகந்த்(அமர்கந்த்)



என்னென்ன தேவை?

கெட்டித் தயிர் - 1 1/2 கப்,
மாம்பழ பல்ப் (கூழ்) - 3/4 கப்,
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்,
குங்குமப்பூ - 3 பிரிகள்,
சீவிய பாதாம், பிஸ்தா - அலங்கரிக்கத் தேவையான அளவு,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?  

ஒரு மஸ்லின் துணியில் தயிரை 30 நிமிடம் கட்டி தொங்க விடவும். அதில் உள்ள தண்ணீர் முழுவதும் வடியட்டும். பின்பு அந்த கெட்டித் தயிரை எடுத்து தனியே வைக்கவும்.
மாம்பழத் துண்டுகளை நன்கு கூழாக வரும்படி அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் மாம்பழ கூழ், தயிர், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். இதன் மேல் குங்குமப்பூ தூவி கலக்கவும். பரிமாறுவதற்கு முன் சீவிய பாதாம், பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.1 மணி நேரம் குளிர வைத்து பின்பு பரிமாறவும்.