பனீர் குலாப் ஜாமூன்



என்னென்ன தேவை?

பனீர் - 1 ணீ,
மைதா - 2 1/2 டீஸ்பூன்,
சமையல் சோடா - 1 டீஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் - 2 துளிகள்,
பிஸ்தா - 1/2 டீஸ்பூன் (அலங்கரிக்க),
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு - 1 சிட்டிகை.  

சர்க்கரைப் பாகுக்கு...

சர்க்கரை - 1 கப்,
தண்ணீர் - 1 கப்,
குங்குமப்பூ - சிறிது.

எப்படிச் செய்வது?  

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும். இதை நன்கு கம்பி பாகு பதம் வரும் வரை கொதிக்க
வைக்கவும். பனீரை சாதாரண வெப்ப நிலைக்கு கொண்டு வரவும். மென்மையான பந்தாக வரும் அளவுக்கு பனீரை கைகளால் பிசையவும். இந்த பனீருடன் மைதா, சமையல்  சோடா, சிட்டிகை உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உருண்டையாகப் பிடிக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை பிசைந்து  உருண்டை பிடிக்கவும். இதை 10 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு இந்த மாவை சின்ன உருண்டைகளாக அதிக அழுத்தம் கொடுக்காமல் உருட்டிக்  கொள்ளவும். கடாயில் எண்ணெய் வைத்து மிதமான தீயில் 3-4 உருண்டைகளாக போட்டு நல்ல பிரவுன் கலர் வரும் வரை பொரித்தெடுக்கவும். பிறகு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் வடிந்த பிறகு, சர்க்கரைப் பாகில் போடவும். ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும். 2 மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.