ரோஸ்  புட்டிங்



என்னென்ன தேவை?

பால் - 2 கப்,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
ரோஸ் மில்க் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்,
சைனா கிராஸ் - 3 கிராம்,
தண்ணீர் - 1/4 கப்,
ஸ்ப்ரிங்கிள்ஸ் - அலங்கரிக்கத் தேவையான அளவு.  

எப்படிச் செய்வது?  

சைனா கிராஸை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் இதைப் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து, அதில் ரோஸ் மில்க் சிரப், சர்க்கரை சேர்க்கவும். இந்த நேரத் தில் சைனா கிராஸ் முழுவதுமாக கரைந்திருக்கும். அதில் பால் கலவையைப் போட்டு, வேகமாகக் கலக்கவும். இதை சின்னச் சின்ன கப்புகளில் ஊற்றவும். பிறகு மேலே ஸ்ப்ரிங்கிள்ஸ் சேர்த்து 2 மணி நேரம் குளிர வைக்கவும். பிறகு ஓரங்களை கத்தி யால் கீறி புட்டிங் தனியே வருமாறு எடுக்கவும். குளிரக் குளிர பரிமாறவும்.