சாக்லெட்  கார்ன்ஃப்ளேக்ஸ்



என்னென்ன தேவை?

குக்கிங் சாக்லெட் - 1 கப்,
தூளாக்கிய கார்ன்ஃப்ளேக்ஸ் - 3/4 கப்,
பொடித்த நட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?  

ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க விடவும். இன்னொரு ஹீட் ப்ரூஃப் பாத்திரத்தில் சாக்லெட் அல்லது சாக்கோ சிப்புகளைப் போட்டு கடாயில் வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தஉடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். சாக்லெட் முழுவதும் உருகியவுடன் அடுப்பை அணைக்கவும். கார்ன்ஃப்ளேக்ஸை கையால் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதை சாக்லெட் சாஸுடன் சேர்த்து, நட்ஸ் சேர்த்து வேகமாகக் கலக்கவும். இந்தக் கலவையை சின்ன பேப்பர் கப்புகளில் ஸ்பூனால் எடுத்துப் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு மணி நேரம் குளிரூட்டி, பிறகு பரிமாறவும்.