ஃப்ரூட்டி  பார்ஃபெயிட்



என்னென்ன தேவை?

நறுக்கிய மிக்ஸட் பழங்கள் - 1 கப்,
வெனிலா கஸ்டர்டு பவுடர் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்,
பால் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?  

1 டீஸ்பூன் பாலில் கஸ்டர்டு பவுடரைக் கலந்து நீர்த்த கரைச லாக (பேஸ்ட்) செய்து வைக்கவும். பாலில் 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடி கனமான பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். இத்துடன் கஸ்டர்டு பவுடர் மில்க் பேஸ்டை சேர்த்து கட்டிகள் வராமல் தொடர்ந்து கிளறவும். இது விரைவில் கெட்டியாகி விடும் என்பதால் தொடர்ந்து கிளறவும்.

 இந்தக் கலவை கொப்புளித்து கெட்டியாக மாறும் போது கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளவும். அதில் முதல் லேயராக கஸ்டர்டு கலவையை ஸ்பூனால் ஊற்றவும். இதன் மேலே நறுக்கிய பழங்களை சேர்க்கவும். திரும்பவும் கஸ்டர்டு மிக்ஸ் சேர்க்கவும். இதே போல் மாற்றி மாற்றிச் செய்து கிளாஸ் முழுவதுமாக ஊற்றவும். தேவைப்பட்டால் குளிர வைத்துப் பறிமாறவும்.