ஸ்பாஞ் கேக்



என்னென்ன தேவை?

வெண்ணெய் - 125 கிராம்,
சர்க்கரை - 125 கிராம்,
மைதா - 125 கிராம்,
முட்டை - 2,
வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
பால் - 1/4 கப்,
உப்பு - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?


அவனை 350C - 10 நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து வைத்துக்கொள்ளவும்.வெண்ணெய், முட்டை, சர்க்கரை இவைகளை பீட்டரில் சர்க்கரை கரையும் வரை கலக்கவும். இத்துடன் சலித்த மைதா, பேக்கிங் பவுடர்,  வெனிலா எசன்சை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பேக்கிங் பேனில் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து பேன் முழுக்க தடவிக்  கொள்ளவும். பிறகு சிறிது மாவு எடுத்து பேனில் பரவும்படி தூவிக்கொள்ளவும். பிறகு பேனை கீர் தட்டி தேவையற்ற மாவை அகற்றவும்.  இதில் கலந்து வைத்த மாவு பேட்டரை சேர்த்து அவனில் 300C- 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். ஆறிய பிறகு பேக்கிங் பேனை  தலைகீழாக திருப்பி மேல் பகுதியை தட்டி கேக்கை வடிவமாக எடுக்கவும்.சுவையான ஸ்பாஞ் கேக் ரெடி.