பேரீச்சம்பழ கேக்



என்னென்ன தேவை?

மைதா - 2 கப்,
வெண்ணெய் - 1¼ கப்,
பால் - 1½ கப்,  க
ண்டன்ஸ்டு பால் - 400 மி.லி.,
பேரீச்சம்பழம் - 1/2 கப்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 5 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


முதலில் இரண்டு டீஸ்பூன் மைதாவை பேரீச்சம்பழத்தில் சேர்த்து பிசறி வைக்கவும். பிறகு மீதி இருக்கும் மைதாவுடன் பேக்கிங் பவுடர்  மற்றும் சோடாவை சேர்த்து சலிக்கவும். சர்க்கரையும் வெண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்யவும். பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.  அத்துடன் பாலையும் மைதா, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். கடைசியில் பேரீச்சம்பழம் சேர்த்து கலந்து  வெண்ணெய் தடவி, மைதா தூவிய பேக்கிங் பேனில் ஊற்றி 300C - 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.சுவையான பேரீச்சம்பழம் கேக்  ரெடி.

குறிப்பு:  250C- 10 நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்ய வேண்டும்.