எக்லெர்ஸ் ஸ்பாஞ் கேக்



என்னென்ன தேவை?

மைதா - 200 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
தயிர் - 150 கிராம்,
எண்ணெய் - 60 மி.லி.,
பால் - 60 மி.லி.,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?


தயிர், சர்க்கரை மற்றும் எண்ணெயை சேர்த்து நன்கு பீட் செய்ய வேண்டும். பிறகு சலித்த மைதா சிறிது சிறிதாக போட்டு நன்கு  கலக்கவும். பிறகு அதில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, வெனிலா எசன்சை சேர்த்து நன்கு கலக்கவும். அதை நன்கு  பொதுவான  முறையில் கலக்கி மென்மையான பதத்திற்கு வந்தவுடன் பேக்கிங் பேனில் வெண்ணெய் மற்றும் மாவு தடவிய பேனில் இதை ஊற்றி ஃப்ரீ  ஹீட் செய்த அவனில் (300C- 30 நிமிடம்) பேக் செய்து எடுத்தால் சுவையான எக்லெர்ஸ் ஸ்பாஞ் கேக் ரெடி.

குறிப்பு: 300C 10 நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்ய வேண்டும்.