போன்விடா கேக்



என்னென்ன தேவை?

மைதா - 150 கிராம்,
போன்விடா - 50 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
நெய் - 50 கிராம்,
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு மைதா மாவை நன்கு வறுக்கவும். மாவு ஆறியவுடன் போன்விடாவை நன்கு கலந்து  வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். பாகு கொதி வரும்பொழுது சிறிது  சிறிதாக மைதா மாவை தூவி, விடாமல் நன்கு கிளறவும். எல்லா மாவையும் சேர்த்தபிறகு நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி, வெனிலா  எசன்சை போட்டுக் கிளறவும். கலவையை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்பொழுது நெய் தடவி தட்டில் கொட்டி சிறிது  ஆறியவுடன் கட் செய்து பரிமாறவும்.