ரவை கேக்



என்னென்ன தேவை?

வெண்ணெய் - 100 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
தயிர் - 125 மி.லி.,
பால் - 250 மி.லி.,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
ரவை - 250 கிராம்,  
மைதா - 60 கிராம்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,  
உப்பு - 1/4 டீஸ்பூன்,
நட்ஸ் - (முந்திரி, திராட்சை, 8 பாதாம்),
டூட்டி ஃப்ரூட்டி - 1 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை மற்றும் தயிர் சேர்த்து பீட்டரில் பீட் செய்துகொள்ளவும். பிறகு பால் மற்றும் வெனிலா எசன்சை  சேர்த்து கலக்கவும். மைதா, ரவை, பேக்கிங் பவுடரை சலித்து சிறிது சிறிதாக வெண்ணெய் கலவையில் சேர்த்துக் கிளறவும். பிறகு  சிறிதாக நறுக்கிய நட்சையும் டூட்டி ஃப்ரூட்டியை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு வெண்ணெய் மற்றும் மாவு தூவிய பேக்கிங் பேனில்  சேர்த்து ஃப்ரீ ஹீட் செய்தா அவனில் 350C- 40 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான ரவை கேக் ரெடி.

குறிப்பு: ஃப்ரீ ஹீட் 200C- 10 நிமிடம் செய்ய வேண்டும்.