ப்ளம் கேக்



என்னென்ன தேவை?

மைதா - 100 கிராம்,
வெண்ணெய் - 100 கிராம்,
ஓமம் தூள் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை - 100 கிராம்,
 திராட்சை - 30 கிராம்,
முந்திரி, பிஸ்தா, வால்நட் - 40 கிராம்,
சுக்குத்தூள் -1/2 டீஸ்பூன்,
பால் - 30 மி.லி,
முட்டை - 3,
செர்ரி பழம் - 50 கிராம்,
திராட்சை ரசம் - 100 மி.லி, பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ்-1டீஸ்பூன்,
சோள மாவு-சிறிதளவு.

எப்படிச் செய்வது?

திராட்சை, முந்திரி, பிஸ்தா, வால்நட், செர்ரி பழம் அனைத்தையும் திராட்சை ரசத்தில் 24 மணி நேரம் சோக் செய்ய வேண்டும். பிறகு  முட்டை, வெண்ணெய், வெனிலா எசன்சை சேர்த்து பீட் செய்து, பிறகு மைதா, ஓமம் தூள், சுக்குத்தூள், சோள மாவு, பேக்கிங் பவுடரையும்  சலித்து வெண்ணெயில் கலந்துகொள்ளவும். பிறகு சோக் செய்த நட்ஸ்சை சேர்த்து மாவு கலவையை கலக்கவும். பிறகு பேக்கிங் பேனில்  வெண்ணெய், மாவை தடவி எடுத்து இந்த மாவு கலவையை கொட்டி ஃப்ரீ ஹீட் செய்த அவனில் 300C-40 நிமிடம் பேக் செய்து எடுக்க  வேண்டும். ஆறிய பிறகு பேனில் இருந்து கேக்கை எடுத்து சிறிய துண்டுகளாய் கட் செய்து எடுக்கவும்.சுவையான ப்ளம் கேக் ரெடி.

குறிப்பு: ஃப்ரீ ஹீட் 200C- 10 நிமிடம் செய்ய வேண்டும்.