பூனம் காட்டிய தாராளம்





‘மிஸ் ஆந்திரா’வாக 2006ல் தேர்வு செய்யப்பட்ட பூனம் கவுர் பிறந்து, வளர்ந்தது ஐதராபாத் என்றாலும், அம்மணியின் ஃபேஷன் டிசைனிங் படிப்பு டெல்லியிலுள்ள ஒரு கல்லூரியில் முடிந்தது. அப்போது அவரது கொள்ளை அழகைப் பார்த்து மயங்கிய ஒரு இயக்குநர், மாடலிங் துறைக்கு அழைத்தார். கரும்பும் கொடுத்து, அதை தின்பதற்கு கூலியும் கொடுத்தார்கள். மாடலிங் மூலம் பூனத்துக்கு அதிக வருவாய் கிடைத்தது. பிறகு தெலுங்கில் ‘மாயாஜாலம்’ படத்தில் அறிமுகமானார். நிறைய படங்களில் நடித்தார். அப்படியே தமிழுக்கும் வந்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘நெஞ்சிருக்கும் வரை’ என்ற படத்தில், ‘தீபா’ என்ற பெயரில் நரேன் ஜோடியாக நடித்தார். பிறகு கமல்ஹாசனின் ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘வெடி’ படங்களில் நடித்தார். வரவேற்பு கிடைக்கவில்லை. உடனே தன் பெயரை ‘நட்சத்ரா’ என மாற்றிக்கொண்டு, ‘பயணம்’ படத்தில் நடித்தார். பிறகு கன்னடத்திலும், மலையாளத்திலும் நடித்தார். பெயர் மாற்றம் அவருக்கு கை கொடுக்கவில்லை. எனவே, மீண்டும் ‘பூனம் கவுர்’ ஆனார். பழைய பெயரிலேயே நடிப்பது ஓரளவு கைகொடுத்துள்ளது.



தமிழில் ஷாம் ஜோடியாக ‘6’, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட ‘வதம்’, புது ஹீரோவுடன் ‘ரணம்’, ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ‘கெஸ்ட்’, மலையாளத்தில் ‘பேங்கிள்ஸ்’, தெலுங்கில் ஒரு படம் என 6 படங்களில் நடிக்கிறார். இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளில் சரளமாகப் பேசும் பூனம், தமிழில் மட்டும் தடுமாறுகிறார்.

ஸ்ரீதேவி, நந்திதா தாஸ், ஷபனா ஆஸ்மியின் நடிப்புக்கு தீவிர ரசிகையான பூனம், கவர்ச்சி விஷயத்தில் செம தாராளம். ‘கெஸ்ட்’ படத்தில் ஹரீஷ் கல்யாணுடன் நடித்துள்ள பெட்ரூம் காட்சி, ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ‘வதம்’ படத்தில், தன்னை வஞ்சித்தவர்களைப் பழிவாங்கும் துணிச்சலான வேடம். வில்லன்களுடன் எகிறிக் குதித்து சண்டை போட்டு அசத்தியுள்ளார். தவிர, ‘6’ படமும் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று காத்திருக்கிறார்.
- தேவராஜ்