ஐந்து ஐந்து ஐந்து : விமர்சனம்





கார் விபத்தில் சிக்குகிறார் பரத். உடன் பயணித்த தன் காதலி மிருத்திகா இறந்துவிட்டதாக நினைக்கிறார். ஆனால், மருத்துவரும் பரத்தின் அண்ணனான சந்தானமும் அப்படி ஒரு காதலியே உனக்கு இல்லை என்று சாதிக்கிறார்கள். இதற்கிடையில் பரத் தன்னுடன் வேலை பார்க்கும் எரிக்கா பெர்னாண்டஸுடன் பழகுகிறார். மெல்ல மெல்ல தன் காதலி உயிருடன் இருப்பதை அறிகிறார். பிறகு என்ன? தன் காதலியை பரத் எப்படி அடைகிறார், தன்னை தவிக்க வைத்து வேடிக்கை பார்த்த வில்லனை எப்படி பந்தாடுகிறார் என்பது மீதிக் கதை.

சிக்ஸ் பேக் உடற்கட்டுதான் பரத், வசீகரிக்கிறார். மிருத்திகா, ஸ்வீட். எரிக்கா பெர்னாண்டஸின் ஆரம்பம் ஜோராக இருந்தாலும் முடிவு புருவத்தை உயர்த்துகிறது. சந்தானம் தன் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு ரசிக்க வைக்கிறார். வில்லன் சுரேஷ் பெர்ரி ஓகே. பாடல்களில் இசையமைப்பாளர் சைமனின் திறமை பளிச். ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யூவின் ஜாலம் கவனிக்க வைக்கிறது. ஹைக்கூ பாணியில் கதை சொல்லி அசத்தியுள்ளார், இயக்குநர் சசி.