நடிகரின் மனைவி சிபாரிசில் ஹீரோயினான நடிகை





‘சென்னை எக்ஸ்பிரஸ்’ முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டி புது சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் ‘ஏக் தா டைகர்’ படம் 5 நாளில்தான் இந்த சாதனையை படைத்திருந்தது.

பிரபுதேவா இயக்கும் படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோ. மாஜி ஸ்டன்ட் மாஸ்டரான அஜய்க்கு டான்ஸ் சரியாக வராது. ‘அவரை நல்ல டான்சராக மாற்ற என்னால் முடிந்ததை செய்வேன்’ என சொல்கிறார் பிரபு தேவா.

ஷாருக்கான் நடிப்பில் பர்ஹா கான் இயக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்துக்கு புதுமுக ஹீரோயினை தேடி வந்தார்கள். இந்நிலையில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடிக்கும்போது ஷாருக்கின் மனைவி கவுரி கானுக்கு நெருங்கிய தோழியாக மாறினார் தீபிகா படுகோன். இதனால் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்திலும் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஒரே ஜிம்முக்கு தினமும் வரும்போது நடிகை ஹுமா குரேஷியுடன் நட்பாக பழகினார் ஷாஹித் கபூர். இப்போது இருவருமே காதலில் விழுந்துவிட்டார்களாம். ஹுமாவுக்காக பட வாய்ப்புகளுக்கு சிபாரிசு செய்கிறார் ஷாஹித்.

‘கஹானி 2’ படத்துக்காக உடல் எடையை குறைக்க படாத பாடு படுகிறார் வித்யாபாலன். ஜிம்மில் தினமும் மூன்றரை மணி நேரம் செலவழிக்கிறாராம்.

தீபிகா படுகோன், ரன்வீர் சிங் நடிக்கும் ‘ராம் லீலா’ படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒரு பாட்டுக்கு ஆடுவதாக தகவல் பரவியது. ஆனால், அதை பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மறுத்துள்ளார்.
- ஜியா