இவன் வேற மாதிரி



படிப்பு முடிந்து வேலை தேடும் விக்ரம் பிரபு, சட்ட அமைச்சரின் அராஜாகத்தை கண்டு பொங்கி எழுகிறார். அவருக்கு பாடம் புகட்ட நினைப்பவர் பரோலில் வெளிவந்திருக்கும் அவரது தம்பியை கடத்தி வைத்து அமைச்சர் பதவி பறிபோக காரணமாகிறார். தன்னையும் தன் அண்ணனையும் நடுத் தெருவுக்கு கொண்டு வந்த விக்ரம் பிரபுவை அமைச்சரின் தம்பி பழி வாங்க துடிக்கிறார். யாருக்கு வெற்றி என்பது கதை.

‘கும்கி’யில் காதல் நாயகனாக வந்த விக்ரம் பிரபுவுக்கு இதில் ஆக்ஷன் ரோல். பிரமாதம். வெகுளித்தனமான கேரக்டரில் சுரபி அப்படி பொருந்துகிறார். அமைச்சரின் தம்பியாக வரும் வம்சி, வில்லனாக வந்தாலும் ஹீரோ ரேஞ்சுக்கு அசத்தியிருக்கிறார். அமைச்சராக வரும் ஹரிராஜ், கமிஷனராக வரும் கணேஷ் வெங்கட்ராம் என அனைவரும் வஞ்சனை வைக்காமல் நடித்துள்ளார்கள். ராஜசேகரின் சண்டைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. சக்தியின் ஒளிப்பதிவு நன்று. சத்யாவின் இசை ஒன்ஸ்மோர் ரகம். தனக்கு அக்மார்க் கமர்ஷியல் படமும் கைவந்த கலைதான் என்பதை ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன் நிரூபித்திருக்கிறார்.