ரயில் காதல்



‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ என்கிற குறும்படத்தை இயக்கிய ராஜேஷ், அதையே சினிமாவாக இயக்கியுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்த மிதுன் நாயகன். நாயகி மிருதுளா. வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த், முக்கிய வேடத்தில் ஆதவன் நடிக்கிறார்கள். இசை விஜய் பெஞ்சமின். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்.ராஜேஷ்குமார்.

ரயில் பயணத்தில் சந்திக்கும் நாயகனும் நாயகியும் பயணத்தின் முடிவில் காதலர்களாக மாறுவதுதான் கதை. முழுக் கதையும் ரயிலில் நடப்பதால் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயின் இருவரும் நடிப்பு அனுபவம் உள்ளவர்கள் என்பதால் இயக்குநருக்கு அதிக வேலை கொடுக்காமல் சமர்த்தாக நடித்தார்களாம்.

சிதம்பர கிருஷ்ணன் என்ற நாயகனின் பெயரை நண்பர்கள் செல்லமாக சிக்கி என்று அழைப்பதையே தலைப்பாக்கி உள்ளனர். காதலர்களிடையே எப்படி காதல் தோன்றுகிறது? காதலர்களின் பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காணலாம்? என்பதை ஜனரஞ்சகமாக சொல்லி யிருக்கிறார்கள்.

- எஸ்